• Nov 19 2024

குக்வித்கோமாளி மணிமேகலை அம்மா ஆக போகிறாரா?- ரகசியத்தை உடைத்த கணவர் ஹுசைன்…

stella / 1 year ago

Advertisement

Listen News!

தொகுப்பாளராக சின்னத்திரையில் அறிமுகமானவர் மணிமேகலை.சன் மியூசிக் சேனல் மூலம் தனது பயணத்தை தொடங்கிய அவருக்கு தொகுப்பாளராக இருக்கும்போதே ஏராளமான ரசிகர்கள் இருந்து வந்தனர். இதையடுத்து ஹுசைன் என்பவரை கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

 அவர், அதன்பின் மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பேமஸ் ஆனார்.இதையடுத்து அவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பு தான் அவரது வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. 


தனது துறுதுறு பேச்சால் குக்குகள் முதல் நடுவர்கள் வரை அனைவரையும் திணறடித்து ஸ்கோர் செய்யும் மணிமேகலைக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது. இந்நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த புகழின் காரணமாக சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றையும் ஆரம்பித்து அதிலும் கல்லாகட்டி வருகிறார் .


இப்படி சின்னத்திரையில் பேமஸ் ஆனவராக வலம் வந்துகொண்டிருந்த மணிமேகலை நேற்றுடன் தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகிவிட்டதாக அறிவித்து அனைவருக்கும் பேரதிர்ச்சியை கொடுத்தார்.இதனால் பலரும் அவர் விலகியதற்கான காரணம் என்ன என்று கேட்டு வந்தனர்.


அதன்படி தற்பொழுது மணிமேகலையில் கணவராக  ஹுசைன் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ் சொல்லியிருக்கிறார். அதாவது மணிமேகலை திருமணம் ஆகி 6 வருடங்கள் கழித்து கர்ப்பமாக இருக்கும் காரணத்தினால் தான் குக்வித்கோமாளி ஷோவிலிருந்து விலகியுள்ளதாக கூறியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது  எந்தளவுக்கு உண்மை என்பதும் தெரியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் மணிமேகலை கர்ப்பமாக இருப்பதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.





Advertisement

Advertisement