• Sep 20 2024

குக்வித் கோமாளி நிகழ்ச்சி 4 சீசனுடன் முடிவுக்கு வருகின்றதா?- அடுத்த சீசன் நடைபெறாதா? -வெளியாகிய அதிர்ச்சித் தகவல்

stella / 1 year ago

Advertisement

Listen News!

கடந்த சில மாதங்களாக விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நான்காவது சீசன் ஒளிபரப்பான நிலையில் நேற்று 5 மணி நேரம் ஃபினாலே நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.

விசித்ரா, ஸ்ருஷ்டி டாங்கே, ஆண்ட்ரியன், மைம் கோபி, கிரண் மற்றும் ஷிவாங்கி ஆகிய 6 போட்டியாளர்கள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் இவர்களில்மைம் கோபி டைட்டில் ஜெயித்து இருக்கிறார். இரண்டாவது இடத்தை ஸ்ருஷ்டியும் மூன்றாம் இடத்தை விசித்ரா ஆகியோர் பிடித்திருக்கின்றனர்.


இந்நிலையில் குக் வித் கோமாளி ஷோவுக்கு இதுதான் கடைசி சீசன் என தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் புகழ் போட்டிருக்கும் பதிவில் 'இதுதான் கடைசி' என குறிப்பிட்டு இருக்கிறார்.

அதனால் விஜய் டிவி குக் வித் கோமாளி ஷோவுக்கும் எண்டு கார்டு போடுவது உறுதியாகி இருக்கிறது. ஷோ ரசிகர்கள் இதானால் அதிர்ச்சியில் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது


Advertisement

Advertisement