• Nov 19 2024

இரண்டாவது திருமணத்திற்கு ரெடியான நாகசைத்தன்யா?- பொண்ணு யாருடைய மகள் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் 7 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். பின்னர், அவர்கள் இருவரும் பெற்றோரின் சம்மதத்துடன் கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக கடந்த ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தனர்.

இவர்கள் இருவருக்கும் இடையே சமரசம் செய்து வைக்க பலரும் முயன்றனர். இருப்பினும், அவர்கள் முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன. இதனைத்தொடர்ந்து, இந்த பிரபலங்கள் இருவரும் படங்களில் நடிப்பதில் தீவிரமாக ஆர்வம் காட்டி வருகின்றனர்.


தொடரந்து நாக சைதன்யா நடிகை சோபிதா என்பவரை காதலிப்பதாக செய்தி பரவியது. ஆனால் அதை அவர்கள் இருவரும் மறுத்தனர்.நாக சைதன்யா தற்போது விரைவில் 2ம் திருமணம் செய்ய இருக்கிறார் என தகவல் பரவி வருகிறது. அவரது அப்பா நடிகர் நாகர்ஜுனா தற்போது திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறாராம்.

பெண்ணின் குடும்பம் முழுக்க முழுக்க பிசினஸ் பின்னணி கொண்டது, சினிமா துறையை சேர்ந்தவர்கள் இல்லை எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது. அத்தோடு இவர்களின் திருமணம் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement