கடந்த 2015இல் இயக்குநர் விக்னேஷ் சிவன் நானும் ரவுடிதான் என்ற படத்தை இயக்கினார் .இதில் விஜய் சேதுபதியுடன் நயன்தாரா நடித்திருந்தார் , இதைத்தொடர்ந்து இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயந்தாராக்கும் இடையே நல்ல நட்பு மலர்ந்தது , இந்த அழகிய நட்பு காதலாக மாறி தற்போது 7 வருடங்களாக காதலித்து வருகிறார்கள்.
இருவருக்கும் ஏற்கனவே நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது. இதனை நயன்தாராவும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார்.
இந்நிலையில் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் வரும் ஜூன் மாதம் 9 ஆம் தேதி திருப்பதியில் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக கூறப்படுகின்றது. திருப்பதி ஏழுமலையான் கோவிலருகே உள்ள மடத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
இதனால் நயன்தாராவின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். மற்றொரு பக்கம் விக்னேஷ் சிவனின் சொந்த ஊரான திருச்சி லால்குடி மக்கள் நயன்தாரா தங்கள் ஊர் மருமகள் ஆகப்போகிறார் என கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் ஏற்கனவே பதிவு திருமணம் செய்து கொண்டதாக தகவல் ஒன்று தீயாய் பரவி வருகின்றது. அதாவது கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதமே நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் ரகசியமாக பதிவு திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் அது பதிவு திருமணம் என்பதால் தற்போது குடும்பத்தார் சூழ திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.
பிறசெய்திகள்:
- நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்ட நமிதா
- விஜய்சேதுபதி – சூரி கூட்டணியில் உருவாகும் விடுதலை படத்தின் புதிய அப்டேட்-குஷியில் ரசிகர்கள்..!
- தளபதி 66 படத்தில் விஜய் லுக் எப்பிடி இருக்கிறது தெரியுமா- இணையத்தில் கசிந்த புகைப்படம்..!
- சிம்புவின் பத்து தல படப்பிடிப்பில் இணையும் பிரபல நடிகர்…!
- தனுஷ் வாழ்க்கையை புரட்டிப்போட்ட அந்த நாள்…நடந்தது என்ன..?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!