• Nov 11 2024

சினிமாவில் இருந்து விலகுகிறாரா நயன்தாரா? - விக்னேஷ் சிவனே கூறிய தகவல்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

ஐயா திரைப்படம் மூலம் சரத்குமாருக்கு ஜோடியா தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நயன்தாரா .மேலும் அதை தொடர்ந்து சந்திரமுகி, சிவகாசி, கஜினி, கள்வனின் காதலி, வல்லவன்,தலைமகன்,ஈ,சிவாஜி,பில்லா உள்ளிட்ட புகைப்படங்களில் நடித்தார்.

மலையாளம்,தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ளார்.லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகையாக வலம் வந்தவர் தான் இந்த நயன்தாரா.

மேலும் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்த நயன்தாரா 2013 ஆம் ஆண்டு சிறந்த நடிகைக்கான தமிழக அரசு விருதை வென்றார்.

2013,2015,2017 ஆகிய ஆண்டுகளில் சிறந்த தமிழ் நடிகைக்கான பிலிம்பேர் விருதுகளை பெற்றார். அத்தோடு கலைமாமணி விருது ,நந்தி விருது ஆகியவைகளை தன் நடிப்புகள் மூலம் மேற்கண்ட விருதுகளை வென்றார்.

மேலும் இந்த நிலையில் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் கடந்த 2015 ஆம் ஆண்டு நானும் ரவுடி தான் படத்தில் இணைந்து பணியாற்றியதில் இருந்து காதலித்து வந்தனர்.

கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த 09.06.2022 இந்து முறைப்படி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

சிவப்பு நிற உடையில் நடிகை நயன்தாராவும்,பொன்னிற ஆடையில் விக்னேஷ் சிவனும் இந்து முறைப்படி தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர்.தமிழகம் முழுவதும் இருந்து வந்த 20 சிவாச்சாரியர்கள் வேதமத்திரங்கள் முழுங்க திருமணத்தை நடத்தி வைத்தனர்.

நயன்தாரா,விக்னேஷ் சிவன் திருமணத்தில் ஏராளாமான திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,

ஷாருக்கான், சூர்யா, போனிகபூர், அனிருத், அட்லி உள்ளிட்ட முக்கிய திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர். மேலும் திரைப்பிரபலங்கள் தங்கள் குடும்பங்களுடன் கலந்து கொண்டு திருமண வாழ்த்து தெரிவித்தனர்.

திருமணத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி உங்களின் ஆதரவுக்கு நன்றி.மேலும் உங்களின் ஆதரவு எங்களுக்கு இனியும் தேவை. தங்களின் சினிமா பயணம் தொடரும் எனவும் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement