• Sep 21 2024

நஸ்ரியாவின் கணவர் பகத் பாசில்... இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரரா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் மற்றும் மலையாளத்தில் முன்னணி இயக்குநராக வலம் வந்த பாசிலின் மகன் தான் நடிகர் பகத் பாசில். இவர் மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தார். இருப்பினும் பின்னர் 7 ஆண்டுகள் நடிக்காமல் இருந்த நிலையில், மீண்டும் சினிமாவில் ரீ எண்ட்ரி கொடுத்து சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதையும் வென்றார்.


மேலும் 2014-ஆம் ஆண்டு ரிலீசான 'பெங்களூரு டேஸ்' என்ற படத்தில் நடித்தபோது நடிகை நஸ்ரியா மீது காதல் வயப்பட்ட பகத், அவரையே திருமணமும் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் இணைந்து கொண்டார்.


திருமணத்தைத் தொடர்ந்து பிறமொழி படங்களிலும் நடிக்க ஆரம்பித்த பகத், தமிழில் வேலைக்காரன் படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக மிரட்டினார். இதனையடுத்து பின்னர் புஷ்பா படம் மூலம் தெலுங்கில் வில்லனாக எண்ட்ரி கொடுத்தார். 

இவ்வாறாக பல மொழிப் படங்களிலும் தனது திறமையை வெளிப்படுத்தி வருகின்ற நடிகர் பகத் பாசில் இன்றைய தினம் தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், இவர் குறித்த தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.


அந்தவகையில் தற்போது இவரின் சொத்து மதிப்புக் குறித்த தகவல் வெளியாகி இருக்கின்றது. கடந்த ஆண்டு 36 கோடி பெறுமதியாக இருந்த இவரின் சொத்து மதிப்பு இந்த ஆண்டு பெரிய படங்களில் நடிக்க ஆரம்பித்திருப்பதால் 50 கோடியாக உயர்ந்துள்ளது.

மேலும் இவரிடம் பச்சை நிற Porsche 911 Carrera S என்கிற ஸ்போர்ட்ஸ் கார் உள்ளது. மேலும் 70 இலட்சம் பெறுமதியான மெர்சிடிஸ் பென்ஸ் இ கிளாஸ், ரூ.2.35 கோடி மதிப்பிலான ரேஞ்ச் ரோவர் Vogue போன்ற சொகுசு கார்களையும் பகத் வைத்திருப்பதாக கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement