• Nov 14 2024

நெல்சனின் அடுத்த படம் இவருடனா ? -இவர் லிஸ்ட்லயே இல்லையே....

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல இயக்குநர் நெல்சன் ரஜினியின் ஜெயிலர் படத்தை தொடர்ந்து  அடுத்ததாக தெலுங்கில் ஒரு படம் இயக்க இருப்பதாகவும், அப்படத்தில் இவரைத்தான் ஹீரோவாக தெரிவு செய்துள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

 விஜய்யின் பீஸ்ட் படத்தினால் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி இருந்த நெல்சன் மீண்டும் வெற்றியை எதிர்நோக்கி ஜெயிலர் படத்தை இயக்கி வந்தார். ரஜினி நெல்சனின் மீது முழு நம்பிக்கை வைத்து ஜெயிலர் படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்தார்.அந்த நம்பிக்கையை நெல்சன் முழுவதுமாக காப்பாற்றிவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும். 


கடந்த மாதம் வெளியான ஜெயிலர் திரைப்படம் செம வசூல் தந்தது , விமர்சன ரீதியாகவும் மிகபெரிய வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது.அந்த வகையில் நெல்சன் அடுத்ததாக தனுஷை வைத்து ஒரு படத்தை இயக்கப்போகின்றார் என பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது நெல்சன் தெலுங்கில் ஒரு படத்தை இயக்க இருப்பதாகவும், அல்லு அர்ஜுன் தான் அப்படத்தில் ஹீரோவாக நடிக்கப்போகிறார் என்றும் தகவல்கள் வருகின்றன.


இதைக்கேள்வி பட்ட ரசிகர்கள் சிலர், நெல்சன் தமிழிலேயே படம் எடுத்தால் நல்லா இருக்குமே, அட்லி தமிழில் மாபெரும் ஹிட் கொடுத்த பிறகு தற்போது பாலிவுட் திரையுலகில் என்ட்ரி கொடுத்துள்ளார். அதை போல தற்போது நெல்சனும் தெலுங்கு பக்கம் போய்விடுவாரோ என்ற ஏக்கம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகின்றது.

Advertisement

Advertisement