விஜய் டிவியில் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில், பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று ஆரம்பமாகியது. முதல் நாளே லியோ படத்தில் இடம்பெற்ற ‘நா ரெடி’ பாடலுடன் படு மாஸாக இன்றைய நாளை போட்டியாளர்கள் ஆரம்பித்தார்கள்.
குறிப்பாக, இந்த பாடலுக்கு ரவீனா, மணிச்சந்திரா, சரவணன் விக்ரம் ஆகியோரின் நடன அசைவுகள் ரசிகர்களை அதிகம் கவர்ந்திருந்தது.அதே போல் ஸ்மால் பாஸ் ஹவுசில் இருக்கும் போட்டியாளர்கள் எந்த டாஸ்க்கிலும் கலந்து கொள்ள முடியாது, ஷாப்பிங் செய்ய முடியாது. உள்ளிட்ட சில விதிமுறைகள் இவர்களுக்கு உள்ளது.
கண்டிப்பாக முதல் நாளே இப்படிப்பட்ட விதிமுறைகளை அவர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இதை தொடர்ந்து முதல் நாளே பிக்பாஸ் வீட்டில் நாமினேஷன் ஆரம்பமாகியது. இந்த நாமினேஷனில் 7 பேர் இடம்பிடித்துள்ளனர்.
இந்த நிலையில் பிக்பாஸ் ஸ்மோல் ஹவுஸிற்குள் இருக்கும் போட்டியாளர்கள் பெரிய வீட்டிற்கு வரும் மட்டும் பிக்பாஸ் பேச மாட்டேன் என்று தெரிவித்திருந்தார். எனவே இதனை கலாய்க்கும் விதமாக முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரான சுரேஷ் சக்கரவர்த்தி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.அதில் பிக்பாஸ் பேசுவது தான் கஷ்டமாக இருக்கும்.
அதை பண்ணாத இதை பண்ணாத என்று சும்மா நச்சரிச்சுக் கொண்டே இருப்பாரு,ஆனால் பிக்பாஸ் பேசாமல் இருப்பது தான் சந்தோஷம். இது எல்லாம் ஒரு தண்டனையா எனக் கலாய்த்துள்ளார் என்பதும் குறிப்பிடத்க்கது.
Listen News!