• Sep 20 2024

ரஜினி மீண்டும் அரசியலுக்கு வருகின்றாரா?- முக்கிய தகவலை வெளிப்படையாகக் கூறிய அவரது சகோதரன்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிஸியாக நடித்து வரும் நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் தான் ரஜினிகாந்த் . இவர் தற்பொழுது இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தனது 169 வது படத்தில் நடித்து வருகின்றார்.இப்படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

மேலும் படங்களில் நடிப்பதைத் தவிர அஜித் அரசியலிலும் நுழையப்போவதாக கடந்த ஆண்டிலிருந்து தகவல் வெளியாகிக் கொண்டே இருக்கின்றது.கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக அரசியல் பிரவேசம் குறித்து ஆலோசனை மேற்கொண்டு வந்த நடிகர் ரஜினிகாந்த் பின்னர் உடல்நிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தனது முடிவை கைவிடுவதாக அறிவித்தார். 


சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசியதும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதுகுறித்து பேசிய ரஜினியின் சகோதரர் சத்யநாராயண ராவ் “ரஜினி மீண்டும் அரசியலுக்கு வருவதற்கான வாய்ப்பு இறைவன் கையில்தான் உள்ளது.

 ரஜினி மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு அன்பு மற்றும் பாசத்தின் அடிப்படையில் நடந்தது.ரஜினிகாந்த் தனது படப்பிடிப்பு முடிந்த பிறகு ரசிகர்களை நேரில் சந்திக்க உள்ளார். அது ஏப்ரலில் நடைபெறுவதற்கான வாய்ப்பு உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement