தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் ஹன்சிகா மோத்வானி.
தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளவர் ஹன்சிகா. தமிழில் விஜய், சூர்யா, சிம்பு, கார்த்தி, ஜெயம் ரவி உட்பட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவர் தன்னுடைய குடும்ப நண்பரான தொழிலதிபர் சோஹேல் கதூரியாவை கடந்த சில மாதங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் சோஷியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருக்கும் ஹன்சிகா அவ்வப்போது தனது கிளாமர் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார். சினிமாவுக்கு வந்த சமயத்தில் கொழு கொழுவென இருந்த ஹன்சிகா, திருமணம் சமயத்தில் உடல் எடையை முழுவதுமாக குறைத்து படு ஸ்லிம்மாக காட்சி அளித்தார். இதனால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
இந்நிலையில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தனது யோகா செய்யும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார் ஹன்சிகா. அதற்கு நெட்டிசன் ஒருவர், ஆபரேஷன் மூலமாக உடல் எடையை குறைத்துவிட்டு, தற்போது யோகாவால் தான் உடம்பு குறைந்துள்ளதாக ஹன்சிகா பொய் சொல்வதாக கமெண்ட் செய்திருந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள ஹன்சிகா, 'நான் என்னுடைய உடலை குறைப்பதற்கு கடினமாக உழைத்து இருக்கிறேன். அதில் யோகாவும் ஒன்று. இதில் நகைசுவை என்னவென்றால், யோகா நேர்மறை என்னத்தை பரப்புவதோடு வெறுப்பை குறைக்கும் என குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Listen News!