• Nov 14 2024

ரஜினியின் இரண்டாவது செந்தர்யா இத்தனை திறமை வாய்ந்தவரா?- கிரேஃட் மேடம் நீங்க- குவியும் பாராட்டுக்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக தனுஷின் மனைவி என்று இருந்தாலும் தன் தந்தையான ரஜினிகாந்தின் மகள் என்ற அடையாளத்தோடு இயக்குநராகவும் வலம் வருபவர் தான் ஐஸ்வர்யா . தந்தையுடன் தான் பல நிகழ்வுகளிலும் பங்கேற்று வருகின்றார்.

மேலும் இவர் தனது காதல் கணவனான தனுஷைப் பிரிவதாக அண்மையில் அறிவித்திருந்தார்.இருப்பினும் தொடர்ந்து இவர்களை சேர்த்து வைக்க பலரும் பேச்சு வார்த்தை நடத்தி இருந்தனர். ஆனால் தனுஷ் சேர்ந்து வாழ்வதற்கு மறுப்புத் தெரிவித்து விட்டார்.

இதனைத் தொடர்ந்து ஐஸ்வர்யா தனது கெரியரில் அதிக கவனம் செலுத்தி வருகின்றார். மேலும் இவருடைய சகோதரி தான் சௌந்தர்யா இவரும் சினிமாவில் தனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்க முயற்சி செய்து வருகின்றார்.

இவர் கிராபிக்ஸ் துறையில் நிறைய சாதனைகள் செய்திருக்கிறார். தனுஷை வைத்து வேலையில்லா பட்டதாரி 2 படத்தை இயக்கி இயக்குநராக மக்களிடம் அதிகம் பிரபலம் ஆனார்.

இப்போது அவர் மறுமணம் செய்து இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார் என தகவல்கள் வர ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள். இவர் தமிழ் சினிமாவில் வெளியான பல படங்களின் பெயர்களை டிசைன் செய்துள்ளாராம்.

அது என்னென்ன படங்கள் என்றால் படையப்பா, பா பா, சந்திரமுகி, அன்பே ஆருயிரே, சிவாஜி, சண்டக்கோழி, சென்னை 28, மஜா, சிவாஜி, கோச்சடையான் போன்ற படங்களுக்காக டிசைனை இவர் தான் செய்துள்ளாராம். இந்தத் தகவல் அறிந்த நெட்டிசன்கள் இவ்வளவு நாள் தெரியாமல் போச்சே எனக் கூறி வருவதையும் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement