• Sep 21 2024

அனல் பறக்கும் சாதனையில் ரன்பீர் கபூரின் பிரம்மாஸ்திரம் திரைப்படம், தொடக்க நாளிலேயே இத்தனை கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனையா?

Thiviya / 2 years ago

Advertisement

Listen News!

ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட்டின் பிரம்மாஸ்திரா பாக்ஸ் ஆபிஸில் ஒரு சிறந்த தொடக்கத்தை கொண்டுள்ளது, மாலை வரையிலான ஆரம்பகால போக்குகளின்படி, அயன் முகர்ஜி இயக்கிய பிரம்மாஸ்திரா முதல் நாள் ரூ 30 கோடிக்கு மேல் வசூல் செய்து உள்ளது. இதுவரை உள்ள டிரெண்ட்கள் ஒரு நாளைக்கு ரூ. 30 முதல் 32 கோடி ரூபாய் என்று கூறுகின்றன, ஆனால் மாலை மற்றும் இரவு ஷோக்களுக்கான இடங்கள் அதிகமாக இருந்தால், பிரம்மாஸ்திரா இந்தியில் ரூ. 35 கோடியை நெருங்க வாய்ப்பு உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. 


ரன்பீர் கபூருக்கு இதுநாள் வரையில் மிகப் பெரிய ஓப்பனராக உருவெடுத்த திரைப்படம் இதுவாகும் . மேலும் பாலிவுட் படத்திற்கான விடுமுறை அல்லாத ஓப்பனிங் சாதனையும் கூட. மாலைக் காட்சிகள் முன்கூட்டியே அதிகமாக இருப்பதால் ரூ. 30 கோடி தொடக்கம் 40 வரை வசூல் செய்வதற்கு இருக்கிறது என்று  நம்பப்படுகின்றது 

தென்னிந்திய டப்பிங் பதிப்பிலும் இப்படம் வசூலில் நல்ல தொடக்கத்தை எடுத்துள்ளது, உண்மையில், இன்றுவரை ஒரு ஹிந்தித் திரைப்படத்தில் மிகப்பெரிய மதிப்பீடுகளின்படி, தெலுங்கு, தமிழ் மற்றும் பிற டப்பிங் பதிப்புகள் ரூ. 5 கோடி மொத்த வசூல் செய்யும் திரைப்படம் இதுவாகும். தெலுங்குப் பதிப்பின் பங்களிப்பு சுமார் 3.5 முதல் 4 கோடி வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.பிரம்மாஸ்திராவின் அகில இந்திய வசூல்  ரூ. 36 கோடி வரை செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisement

Advertisement