• Nov 14 2024

தளபதி 67 படத்தில் சமந்தா நெக்கட்டிவ் ரோலில் நடிக்கின்றாரா?- படக்குழு தரப்பிலிருந்து வெளியாகிய விளக்கம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் விஜய். இவர் நடிப்பில் வெளியாகிய திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றிருப்பதோடு வசூலிலும் அள்ளிக்குவித்து விடும். இருப்பினும் இவர் நடிப்பில் இறுதியாக வெளியாகிய பீஸ்ட் திரைப்படம் மோசமான விமர்சனங்களையே பெற்றது.

இதனைத் தொடர்ந்து தற்பொழுது தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்னும் படத்தில் நடித்து வருகின்றார் இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருவதோடு ஏராளமான நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில நடித்து வருகின்றது.

மேலும் அப்படத்தை தொடர்ந்து விஜய் மீண்டும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவரின் 67-வது திரைப்படமாக உருவாகும் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். ஆனால் அப்படத்தின் அதிகாரபூர்வமான அறிவிப்பும் இன்னும் வெளியாகாமல் உள்ளது.

இதற்கிடையே சமீபத்தில் தளபதி 67 படத்தில் நடிகை சமந்தா வில்லி கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வைரலாக பரவின. மேலும் அவருடம் தளபதி 67 படத்தில் நடிகை பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிப்பதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் தற்போது இது குறித்து படக்குழு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது. இப்படத்தில் நடிகை சமந்தா நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை, அந்த தகவல்கள் உண்மையல்ல என தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement