சமந்தா நடித்த 'யசோதா'படத்தின் அமெரிக்க வசூல் நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்பவர் தான் நடிகை சமந்தா.இவர் விண்ணைத்தாண்டி வருவாயா, நீ தானே என் பொன்வசந்தம் படங்களின் தெலுங்கு உருவாக்கத்தில் நடித்து புகழ்பெற்றார்.
சமீபத்தில் ரங்கஸ்தலம், சூப்பர் டீலக்ஸ், பேமிலி மேன் 2 இவருக்கு நல்ல பேரை பெற்றுத்தந்தது. அத்தோடு கடைசியாக தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து இருந்தார்.
சமந்தா, தெலுங்கில் சாகுந்தலம் , யசோதா, குஷி போன்ற படங்களில் தற்போது நடித்து வருகிறார். நடிகை டாப்ஸியின் அவுட்சைடர்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு புதிய படத்தின் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமாகிறார் நடிகை சமந்தா.
எனினும் தற்போது நடிகை சமந்தா நடித்த யசோதா படம் கடந்த நவம்பர் 11 ஆம் தேதி வெளியானது. அத்தோடு வாடகைத் தாயாக நடிகை சமந்தா இந்த படத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படத்தில், வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா, சம்பத் ராஜ், பிரியங்கா சர்மா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர்.
'யசோதா’ திரைப்படத்தினை Sridevi Movies சார்பில் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரித்தனர். ஹரி-ஹரீஷ் இப்படத்தில் இயக்குனர்களாக பணிபுரிந்துள்ளனர்.
இவ்வாறுஇருக்கையில் இந்த திரைப்படம், ஒரு வாரத்தில் அமெரிக்காவில் மட்டும் சுமார் 5 லட்சம் அமெரிக்க டாலர்களை வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 4.06 கோடி ரூபாயை வசூலித்து உள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Listen News!