நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களைத் தொடர்ந்து எச். வினோத் மற்றும் போனிகபூருடன் இணைந்து அஜித் மூன்றாவது முறையாக நடித்து வரும் திரைப்படம் தான் துணிவு.இந்த படத்தில் மஞ்சு வாரியர், ஜான் கோக்கன், சிபி சக்கரவர்த்தி, அமீர், பாவ்னி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
ஜிப்ரான் இசையமைப்பில் இப்படம் உருவாகி வருகின்றது.வங்கி கொள்ளையை மையமாக வைத்து க்ரைம் ஆக்சன் த்ரில்லர் ஜானரில் துணிவு திரைப்படம் வெளியாகவுள்ளது. தற்போது படத்தின் இறுதிக் கட்ட பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. ஓரிரு நாட்களில் படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
8 ஆண்டுகளுக்கு பின்னர் அஜித், விஜய் படங்கள் பொங்கலுக்கு ரிலீஸாகுவதால் இந்த பொங்கல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த நிலையில் படப்பிடிப்பு தள புகைப்படங்களை, நடிகர் சமுத்திரக்கனி இன்று வெளியிட்டுள்ளார்.இப்படத்தில் சமுத்திரக்கனி போலீஸாக நடித்துள்ளார்.
துணிவு படத்தை தமிழ்நாட்டில் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. தமிழகத்தில் தற்போதைய சூழலில் இந்த விநியோகஸ்த நிறுவனமே முன்னணியில் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!