• Nov 13 2024

சீரியல் நடிகர் நவீன் அப்பாவாகப் போகின்றாரா?- கண்மணி கர்ப்பமாக இருக்கின்றாரா?- அவரே போட்ட முக்கிய பதிவு

stella / 2 years ago

Advertisement

Listen News!


கொரோனா லாக்டவுனை அடுத்து காதல் ஜோடிகளாக இருந்த பல சின்னத்திரை பிரபலங்களும் வெள்ளித்திரை பிரபலங்களும் திருமண பந்தத்தில் இணைந்த கொண்டனர். இவர்களின் திருமண புகைப்படங்களும் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்திருந்தன.

அந்த வகையில் சில மாதங்களுக்கு முதல் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டவர்கள் தான் நவீன் மற்றும் கண்மணி. இதில் கண்மனி சன்டிவியில் தவிர்க்க முடியாத பத்திரிகை வாசிப்பவராக இருந்த வந்தவர் என்பதும் யாவரும் அறிந்ததே.


அதே போல நவீன் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி அண்மையில் முடிவடைந்த இதயத்தைத் திருடாதே என்னும் சீரயலில் கதாநாயகனாக நடித்து வந்தார். இந்த சீரியல் மூலம் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் உள்ளது.

யாரும் எதிர்பாராத விதமாக காதலித்து திருமணம் செய்த இவர்கள் அண்மையில் ஹனிமூன் சென்ற புகைப்படங்கள் எல்லாவற்றையும் பகிர்ந்திருந்தார்கள். இது தவிர சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாகவும் இருந்து வருகின்றனர்.அத்தோடு ரசிகர்களிடமும் அடிக்கடி உரையாடி வருகின்றனர்.


இதனடிப்படையில் ரசிகர் ஒருவர் கண்மணி கர்ப்பமாக இருக்கின்றாரா? எனக் கேட்டுள்ளார். அதற்கு பதில் எதில் எதுவும் கூறாமல் சிரிக்கும் எமோஜியைப் பதிவிட்டிருக்கின்றார் கண்மணி. இதனால் இவர் கர்ப்பமாக இருக்கின்றாரா? இல்லையா? என ரசிகர்கள் குழம்பிப் போயுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement