• Sep 21 2024

‘கயல்’ சீரியல் நடிகை சைத்ராவின் அம்மா இவர் தானா?…எவ்வளவு அழகா இருக்காங்க பாருங்க..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் ஹிட் சீரியல்களில் ஒன்று ‘கயல்’. இந்த சீரியலில் கயல் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டு வருகிறார் நடிகை சைத்ரா ரெட்டி. அப்பாவினால் கைவிடப்பட்ட தனது குடும்பத்தை ஒரு மூத்த மகளாக எடுத்து நின்று, குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய தினமும் எப்படி போராடுகிறார் என்பதே இந்த சீரியலின் கதை.

இவருக்கு ஜோடியாக எழிலரசன் கதாபாத்திரத்தில் ராஜா ராணி சீரியல் சஞ்சீவ் நடித்துக் கொண்டு வருகிறார். 

இவர் சின்னத்திரையில் மட்டுமல்லது வெள்ளித்திரையிலும் கால் பதித்துள்ளார். தல அஜித்தின் ‘வலிமை’ திரைப்படத்திலும், ஆண்ட்ரியா நடிப்பில்  வெளியான ‘வட்டம்’ திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை சைத்ரா  ரெட்டி. இவர் அவ்வப்பொழுது தனது அழகிய புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார்.

 

தற்பொழுது இவர் தனது அம்மாவுடன் மலேசியாவிற்கு சென்றுள்ளார். அங்கு எடுக்கப்பட்ட அழகிய வீடியோ ஒன்றை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ‘இவர்தான் நடிகை சைத்ராவின் அம்மாவா?’ என்று ஆச்சரியமாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Advertisement

Advertisement