• Sep 21 2024

வெந்து தணிந்தது காடு படத்தினை சிம்பு இந்த தியேட்டரில் தான் பார்க்கப் போகின்றாரா?- வெளியாகிய லேட்டஸ்ட் அப்டேட்

stella / 2 years ago

Advertisement

Listen News!

முதலில் நீங்கள் முதலில் பார்த்து படம் எப்படி இருக்கிறது என சொல்லுங்க, அதன் பின் நான் பார்க்கிறேன்' என நடிகர் சிம்பு தெரிவித்து இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் தான் சிம்பு.இவர் நடிப்பில் இறுதியாக வெளியாகிய மாநாடு திரைப்படம் வேற லெவலில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதோடு இவரின் கெரியரில் திருப்பு முனையாகவும் அமைந்துள்ளது.

மேலும் இவரது நடிப்பில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு படம் நாளைய தினம் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இப்படத்தை இயக்குநர் கௌதம் வாசுதேவன் இயக்கியுள்ளார். இப்படத்தின் அதிகாலை காட்சிகள் காலை 5 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.


அந்த காட்சிக்காக இப்போதே அனைத்து திரையரங்குகளிலும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டது. இந்த நிலையில் இப்படத்தின் அதிகாலை காட்சிகள் பார்க்க வரும் ரசிகர்கள் நன்றாக தூங்கிவிட்டு அதன் பின் வாருங்கள் என இயக்குநர் கௌதம் மேனன் ஏற்கனவே தெரிவித்து இருக்கிறார்.

அந்த வகையில் சிம்பு இன்று ரசிகர்களுடன் டுவிட்டர் உரையாடினார். நீங்கள் எந்த தியேட்டரில் வெந்து தணிந்தது காடு பார்க்க போகிறீர்கள் என கேட்டதற்கு, 'முதலில் நீங்கள் முதலில் பார்த்து படம் எப்படி இருக்கிறது என சொல்லுங்க, அதன் பின் நான் பார்க்கிறேன்' என தெரிவித்து இருக்கிறார்.


எந்த தியேட்டர் என சிம்பு பதில் சொல்லவில்லை என்பதால் அவர் சர்ப்ரைசாக சில முக்கிய தியேட்டர்களுக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement