• Sep 20 2024

சிம்புவின் ‘பத்து தல’படம் வெற்றியா?தோல்வியா?..அறிக்கை விட்டு விளக்கிய தயாரிப்பாளர்! என்ன சொல்லியிருக்காரு பாருங்க..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர்கள் சிலம்பரசன், கெளதம் கார்த்திக், கெளதம் மேனன், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் 'பத்துதல' திரைப்படம் கடந்த மார்ச் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.நேற்றைய நிலவரப்படி பத்து தல திரைப்படம் வசூலில் 55 கோடியை தாண்டியதாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இந்த திரைப்படமா வெற்றித்திரைப்படமா? இல்லை தோல்வி திரைப்படமா? என்பதை விளக்கும் வகையில் அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அந்த அறிக்கையில், “எங்களின் பத்து தல திரைப்படம் தமிழகம் முழுவதும் 300-க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும் உலகம் முழுவதும் 500 திரையரங்குகளிலும் இன்று இரண்டாவது வாரத்தில் நுழைந்துள்ளது. 

எங்களின் படத்திற்கு ரசிகர்களிடம் இருந்து இவ்வளவு அமோக வரவேற்பு கிடைத்திருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. அதற்காக, சிலம்பரசன் (STR) ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு முழு மனதுடன் எங்களது நன்றிகளை தெரிவிக்க விரும்புகிறோம். படம் குறித்து பாராட்டி அதை உயர்த்திய விமர்சகர்கள் மற்றும் ஊடகங்களின் ஆதரவிற்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்.

 

‘பத்து தல’ திரைப்படம் சிலம்பரசனின் கரியரில் அதிக வருவாயை ஈட்டிய ஒரு படமாக மட்டுமில்லாமல் எங்களின் தயாரிப்பு நிறுவனத்திற்கும் பெரும் லாபம் தந்திருக்க கூடிய படமாகவும் அமைந்துள்ளது.

சிலம்பரசன் (STR) இந்தப் படத்தின் ஒரு முக்கியமாக அங்கமாக இருந்து, அவரது சிறப்பான ஆதரவை கொடுத்து உதவியுள்ளார். குறிப்பாக இசை வெளியீட்டு விழா மற்றும் பிற புரோமோஷன்களில் கலந்து கொண்டு படத்திற்கு ஒரு பெரிய கவன ஈர்ப்பைக் கொண்டு வந்து, படம் பலவழிகளில் வெற்றிபெற உதவியதற்காக அவருக்கு எங்களது நன்றியை தெரிவிக்க விரும்புகிறோம்.ஏ.ஆர். ரஹ்மானுக்கு எங்களது சிறப்பு நன்றி. ரஹ்மான் சார் தனது பிஸியான ஷெட்யூலுக்கு மத்தியிலும் எங்கள் படத்திற்கு எல்லா வகையிலும் ஆதரவு அளித்து பல வாரங்களாக முதலிடத்தில இருக்கும் சார்ட்பஸ்டர் பாடல்களை கொடுத்ததோடு மட்டுமல்லாமல், சரியான நேரத்தில் அருமையான பின்னணி இசை, இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டது மற்றும் பிற புரோமோஷன்களில் ஒரு பகுதியாக இருந்தது படத்திற்கு பெரிதும் உதவியது.

திரைப்படத்தின் இந்த மூன்று வருட பயணத்தில் தனது உற்சாகத்தை தக்க வைத்து அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் கவரும் வகையில் தரமான கமர்சியல் எண்டர்டெய்னரை கொடுத்த இயக்குனர் ஓபிலி என் கிருஷ்ணா அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்.

படத்தின் பல்வேறு உரிமைகளை சிறந்து விலையில் விற்க படத்தின் மீதான அவரது ஈடுபாடும், அர்ப்பணிப்பும் இந்த படம் சுமூகமாக முடிந்து வெளியே வருவதற்கு முதன்மை காரணம். எல்லா வகைகளிலும் படத்திற்கு முழு ஆதரவு வழங்கிய அன்பான கௌதம் கார்த்திக்கிற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் .

படத்தின் வெற்றிக்கு சிறந்த பங்களிப்பை வழங்கிய மற்ற கலைஞர்கள் பிரியா பவானி சங்கர், கௌதம் வாசுதேவ் மேனன் கலையரசன், சந்தோஷ் பிரதாப், டிஜே அருணாச்சலம் உள்ளிட்ட நடிகர்களுக்கு எங்களது நன்றிகள். நடன சென்சேஷன் சாயிஷா சைகல் தனது நடனத்தால் மிகப்பெரிய வெற்றியை ராவடி பாடலின் மூலம் பெற்று தந்திருக்கிறார்.கடைசி நேரத்தில் நடனத்தில் தனது சிறப்பான பங்களிப்பை கொடுத்ததற்காக அவருக்கும் எங்களது ஸ்பெஷல் நன்றி.

ஒளிப்பதிவாளர் வரும் ஃபரூக் ஜே பாஷா, எடிட்டர் பிரவீன் கே எல் கலை இயக்குனர் மிலன், ஆடை வடிவமைப்பாளர் உத்ராமேனன் வசனம் எழுதிய ஆர் எஸ் ராமகிருஷ்ணன், ஆடியோகிராஃபர்  என். சிவகுமார், சவுண்ட் டிசைனர் கிருஷ்ணன் சுப்ரமணியன்,ஆக்சன் ஆக்சன் கோரியோகிராபர் சக்தி சரவணன், பாடல் ஆசிரியர்கள் பாடல்கள் மற்றும் இதர தொழில்நுட்ப கலைஞர்கள் என இத்தனை காலம் இந்த பயணத்தில் ஒரு அங்கமாக இருந்து பொறுமையாக பயணித்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் எங்கள் நன்றி.

படத்தின் வெளியீட்டை செய்து கொடுத்ததற்காக உலகம் முழுவதும் உள்ள எங்கள் விநியோகஸ்தகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். 1200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் படத்தை வெளியிட்டு இரண்டாவது வாரத்திலும் அதிக எண்ணிக்கையிலான திரையரங்குகளில் தொடர்ந்து ஓடுவதையும் உறுதி செய்துள்ளனர்.

அவர்களின் பெரிய ஆதரவு தான் படத்தை பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெறச் செய்துள்ளது; எங்கள் மீது நம்பிக்கை வைத்து பத்து தல திரைப்படத்தை ஆதரித்த மியூசிக் பார்ட்னர் சோனி மியூசிக் டிஜிட்டல் பாட்னர் அமேசான் பிரைம், சாட்டிலைட் பார்ட்னர் ஜீ தமிழ் ஆகிய அவருக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள் கடைசியாக பத்துதல படம் முழுமையாக ஆதரவளித்த எங்கள் பார்ட்னர் தென்னிந்தியா லிமிடெட் மற்றும் படத்தின் வியாபாரத்தில் எங்களுக்கு எல்லா வகைகளிலும் உதவிய மேங்கோ மாஸ் மீடியாவுக்கும் எங்களது நன்றிகள்” என்று அவர் அதில் குறிப்பிட்டு இருக்கிறார்.


Advertisement

Advertisement