இயக்குநர் பாலா இயக்கும் வணங்கான் படத்தில் ஏற்கனவே சூர்யா நடிக்க நிலையில், அவர் விலகியதன் காரணமாக அருண்விஜய் அந்த படத்தில் நடிக்கிறார். அண்மையில் வணங்கான் படத்தின் ட்ரைலர் வெளியாகி மிரட்டி இருந்தது.
சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி பெருவெற்றி பெற்ற 'பிரேமலு' படத்தின் மூலம் கவனிக்கப்பட்டவர் நடிகை மமிதா. அவரும் வணங்கான் படத்தில் நடித்து, விலகி இருந்தார்.
இதை தொடர்ந்து வணங்கான் படத்தில் இருந்து விலகியது தொடர்பாக நடிகை மமிதா பைஜூ கேள்வி கேட்டபோது, வணங்கான் படத்தில் முதலில் நான் நடித்திருந்தேன். அப்படத்தில் ஒரு பாடலுக்கு பாடிக்கொண்டே ஆடவேண்டும் என்றிருந்தது. நான் அப்போதுதான் அதை கற்றுக்கொண்டிருந்தேன். ஆனால் உடனே அதை செய்துகாட்டும்படி இயக்குனர் கூறினார்.
நான் அதற்கு தயாராக இல்லை என்பதால் பதற்றமாகிவிட்டேன். அச்சமயம் எனக்கு பின்னாலிருந்த அவர் (பாலா) என்னை தோள்பட்டையில் அடிப்பார் என்று கூறியிருந்தார்.
இவ்வாறு மலையாள இளம் நடிகையை இயக்குனர் பாலா எப்படி அடிக்கலாம் என பிரேமலு பாய்ஸ் சோசியல் மீடியாவில் கொந்தளிக்க ஆரம்பித்த நிலையில், அது பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
இது தொடர்பில் நடிகை மமீதாவிடம் மீண்டும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதன் போது அவர் கூறுகையில்,
இயக்குநர் பாலா என்னை தகாத முறையில் நடத்தவில்லை. என்னை எந்த வகையிலும் துன்புறுத்தவில்லை. நான் பேசிய பெரிய பேட்டியில் இருந்து ஒரு சின்ன பிட்டை மட்டும் எடுத்து அதை பெரிய விஷயமாக மாற்றி விட்டார்கள். அதை நான் முழுமையாக மறுக்கிறேன்.
பாலாவிடம் நான் ஒரு வருடம் வேலை பார்த்துள்ளேன். அவருடைய அசிஸ்டன்ட் டைரக்டர் டீம் கூட என்னை நன்றாக கவனித்துக் கொண்டார்கள். எனக்கு அதிக பிரீடத்தை பாலா சார் கொடுத்தார்.
படத்திலிருந்து நான் விலகியதற்கு முக்கிய காரணம், சூர்யா சார் விலகியது தான். அதன் பின் அந்த படம் எப்படி உருவாகும் என்கின்ற எண்ணம் என்னுள் எழுந்தது. மேலும், அதற்கு மறுபடியும் ஆறு மாத காலம் கால்ஷீட் தேவைப்படும் என்றார்கள். ஏற்கனவே நான் ஒரு படத்தில் கால்ஷீட் கொடுத்த நிலையில், இதற்கு நேரம் கிடைக்கவில்லை. அதனால் தான் விலகி விட்டேன் என சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் மலையாள நடிகை மமீதா.
இந்த நிலையில், வணங்கான் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இந்த விவகாரம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டு உள்ளார்.
அதாவது, ''உண்மையைத் தெரிந்துகொள்ளும் முன் பொய்யானதைப் பிடித்துக் கொள்கிறோம். அல்லது ஒருவரைப் பற்றிய தவறான பிம்பத்தைக் கட்டமைக்கிறோம். இயக்குநர் பாலா அண்ணன் படைப்புக்காக போராடக்கூடியவர். பல கதாபாத்திரங்களை வேறொரு உலகத்தில் நின்று சிந்தித்து ஆக்கியவர். சம்பந்தப்பட்டவர்களின் உண்மையை அறியாமலே நாம் படபடத்துவிடுகிறோம் பல நேரங்களில்" என குறிப்பிட்டிருக்கிறார்.
Listen News!