நடிகர் விஜய் வாரிசு படத்தைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இரண்டாவது முறையாக இணைந்து தளபதி 67 படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு, அடுத்த மாத இறுதியில் தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் இப்படத்திற்கான பணிகளில் லோகேஷ் ஈடுபட்டு வருகின்றார்.மேலும் இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகர் விஷால், கௌதம் மேனன், ஆகியோர் நடிக்க உள்ளதாகவும் இன்னும் சில வில்லன் நடிகர்கள் நடிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதே போல் நடிகர் கமல் ஹாசனும், கெஸ்ட் ரோலில் நடிக்க வாய்ப்புள்ளதாகவும், த்ரிஷா விஜய்க்கு ஜோடியாக நடிக்க உள்ளதாகவும் சில தகவல்கள் வெளியாகின.ஆனால் தற்போது வரை இந்த படத்தில், நடிக்க உள்ள நடிகர், நடிகைகள் குறித்து எந்த ஒரு அதிகார பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
அந்த வகையில் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் எனப்படும் எல்.சி.யு வில் இடம்பெறும் என கூறப்பட்டு வந்த நிலையில் அந்த தகவலை உறுதி செய்யும் விதமாக தற்போது மற்றொரு சூப்பர் தகவலும் வெளியாகி உள்ளது.
அதாவது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஹாலிவூட் படமான 'ஹிஸ்டரி ஆப் வைலன்ஸ்' படத்தின் உரிமையை அதிகாரபூர்வமாக வாங்கி உள்ளதாகவும், தளபதி 67 படத்தின் கதைக்காக இந்த படத்தை மறு உருவாக்கம் செய்வது போல் அவர் எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படம் எல் சி யூவிலும் இடம்பெற உள்ளதாக... சில நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து செய்திகள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Listen News!