• Sep 20 2024

பொன்னியின் செல்வன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு தளபதி விஜய்யும் வருகின்றாரா?- இதை யாரும் எதிர்பார்க்கலையே

stella / 1 year ago

Advertisement

Listen News!

லியோ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் கடந்த ஜனவரி மாதம் தொடங்கி தொடர்ந்து 50 நாட்களுக்கு மேல் நடைபெற்றது. இதற்காக தனி விமானம் மூலம் படக்குழுவினர் காஷ்மீருக்கு சென்றிருந்தனர். காஷ்மீரில் ஷூட்டிங்கை முடித்துவிட்டு தற்போது வெற்றிகரமாக அனைவரும் சென்னை திரும்பி உள்ளனர்.

இந்நிலையில், காஷ்மீரில் ஷூட்டிங் நடத்தப்பட்டபோது என்னென்ன சவால்களையெல்லாம் எதிர்கொண்டோம் என்பதை விளக்கும் வகையில் எமோஷனலான மேக்கிங் வீடியோவை இன்று படக்குழு வெளியிட்டுள்ளது.


இதில் படத்தில் பணியாற்றிய டெக்னீஷியன்கள் தான் பேசி உள்ளனர். மைனஸ் 20 டிகிரி வரை குளிரில் ஷூட்டிங் நடத்தியதாகவும் அவர்கள் தெரிவித்தனர். மேலும்  தற்போது சென்னை வந்த நிலையில் அடுத்து சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடக்க இருக்கிறது.

இந்நிலையில் விஜய் விரைவில் நடக்க இருக்கும் பொன்னியின் செல்வன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு விஜய் அழைக்கப்பட்டு இருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.இருப்பினும் அதிகாரபூர்வமாக தகவல் எதுவும் வெளியாகவில்லை. விஜய் PS2 படத்தின் விழாவில் கலந்துகொள்வார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


முதலில் பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவன் ரோலில் முதலில் விஜய்யை தான் நடிக்க வைக்க திட்டமிட்டு இருந்தார் மணிரத்னம். ஆனால் படம் பல வருடங்கள் கழித்து தொடங்கியதால் விஜய் அதில் நடிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.  

Advertisement

Advertisement