• Sep 20 2024

ஜிவி பிரகாஷ் நடித்த 'அடியே' முதல் நாள் வசூல் இவ்வளவு தானா?

Jo / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் நேற்று வெளியான அடியே திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.இந்த படம் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கி உள்ள திரைப்படம் தான் அடியே.


இப்படத்தில் வெங்கட் பிரபு, கவுரி, மிர்சி விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மாலி மற்றும் மன்வி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.


வழக்கமான காதல் கதை போல இல்லாமல், புதுவிதமாக இயக்குநர் சிந்தித்து இருக்கிறார். இந்த கதைக்கு ஜிவி பிரகாஷ் சரியாக இருப்பார் என தேர்வு செய்து நடிக்க வைத்திருக்கிறார். 8 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் முதல் நாளில் 48 லட்சத்தை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


நேற்று ஹன்சிகா மற்றும் ஆதி நடித்த பார்ட்னர் திரைப்படம் வெளியான நிலையில்,அடியே திரைப்படத்திற்கு தான் மக்களிடம் வரவேற்பு அதிகம் இருந்ததாக கூறப்படுகிறது. இன்றும் நாளையும் விடுமுறை தினம் என்பதால் படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement