• Sep 20 2024

எப்போது திருமணம் எனக் கேட்ட நபருக்கு பதிலடி கொடுத்த பிக்பாஸ் ஷெரின்-அடடே திருமணம் முடிந்து விட்டதா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடி முடிந்த ரியாலிட்ரி ஷோவான பிக்பா் சீசன் 3 இல் போட்டியாளராகப் பங்கு கொண்டு பிரபல்யமானவர் தான் ஷெரின். நடிகையான இவர் தனுஷ் நடிப்பில் வெளியான துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

இப்படத்தைத் தொடர்ந்து விசில், ஸ்ருடன்ட் நம்பர் வன் போன்ற இன்னும் சில திரைப்படங்களில் நடித்திருந்தார். இருப்பினும் தனக்கான ஓர் அடையாளத்தை இவரால் பெற முடியவில்லை.

இருப்பினும் பிக்பாஸ் நிகழ்ச்சி தான் இவருக்கான சிறந்த அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. அவர் அந்த ஷோவைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆர்வமாக இருப்பதோடு தனது லேட்டஸ்டான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.

அவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது. இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ஷெரினிடம் ரசிகர் ஒருவர் 'எப்போது திருமணம்' என கேட்டிருக்கிறார். அதற்கு பதில் சொன்ன அவர் "Married to food" என தெரிவித்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement