• Sep 20 2024

பிச்சைக்காரன் 3 -ம் பாகத்தின் பட்ஜெட் மட்டும் இத்தனை கோடியா? - வாயை பிளக்கும் ரசிகர்கள்..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2016 -ம் ஆண்டு வெளியான திரைப்படம் பிச்சைக்காரன்.

இப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர். இப்படத்தை தொடர்ந்து பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தை விஜய் ஆண்டனி இயக்கி நடித்திருந்தார்.

இப்படம் கடந்த மே மாதம் 19ம் தேதி வெளியானது. இப்படத்திற்கு தமிழ் மற்றும் தெலுங்கிலும் வசூல் குவிந்தது.

இந்நிலையில் பிச்சைக்காரன் 3 -ம் பாகம் 2025 -ம் ஆண்டு தொடங்கவுள்ளதாம். இப்படத்தின் பட்ஜெட் மட்டும் ரூபாய் 100 கோடி என்று சினிமா பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.  


Advertisement

Advertisement