• Sep 20 2024

இசையமைப்பாளரின் முன்னாள் மனைவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறாரா-வைரலாகி வரும் தகவல்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் 6வது சீசன் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.தமிழ் சின்னத்திரையில் பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்களை கடந்துள்ளது. இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மக்களிடையே பாரிய வரவேற்பு கிடைத்தது. அதற்கு காரணம்,இந்நிகழ்ச்சியில் பங்கு பெரும் போட்டியாளர்களின் சுவாரஷ்யமான சண்டை, சச்சரவுகள் தான்.பிக்பாஸ் சீசன் 5ற்கு பிறகு பிக்பாஸ் அல்டிமேட் எனும் நிகழ்ச்சி ஓடிடியில் நடத்தப்பட்டது.

அல்டிமேட் நிகழ்ச்சியை நடிகர் சிம்பு அவர்கள் தொகுத்து வழங்கினார்.இதில் கடந்த 5 சீசன்களில் போட்டியாளர்களாக பங்கு பற்றியவர்களே அல்டிமேட் இல் பங்கு பெற்றார்கள்.இந்நிகழ்ச்சி கடந்த மாதம் முடிவடைந்தது.

தற்போது பிக்பாஸ் 6வது சீசன் ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்நிகழ்ச்சியின் போட்டியாளர்களை தெரிவு தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது. அந்த வகையில்,இசையமைப்பாளர் டி.இமான் அவர்களின் முதல் மனைவி மோனிகா ரிச்சர்டு முதலாவது போட்டியாளராக களமிறங்க உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

இசையமைப்பாளர் டி.இமான் மோனிகாவை கடந்த ஆண்டு விவாகரத்து செய்தார்.கடந்த சில நாட்களுக்கு முன் இசையமைப்பாளர் டி.இமான் மறுமணம் செய்து கொண்டதை கலாய்த்து வருகிறார் மோனிகா.அதனால் மோனிகா பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றால் விறு விறுப்பாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

https://www.youtube.com/embed/66paDJnH4XU

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement