நடிகர் அஜித், மஞ்சு வாரியர் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ளது துணிவு படம்.இந்தப் படம் சர்வதேச அளவில் வரும் 11ம் தேதி பொங்கலையொட்டி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.இந்தப் படத்தின் ட்ரெயிலர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி தற்போது 54 மில்லியன் வியூஸ்களை கடந்து சாதனை படைத்து வருகிறது
இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ட்ரெய்லர் வெளிவந்த பின் இப்படத்தின் கதை குறித்து கணிக்க முடிந்தது. அதன்படி, ஹாலிவுட்டில் 2006ஆம் ஆண்டு வெளிவந்த இன்சைட் மேன் படத்தின் காப்பி என்று ப்ளூ சட்டை மாறன் கூறியிருந்தார். ஆனால், ஹாலிவுட் வரை செல்ல தேவையில்லை என தற்போது தெரிய வந்துள்ளது.
ஏனென்றால், கோலிவுட்டில் வெளிவந்த பல கதைகளை காப்பியடித்து தான் துணிவு உருவாகியுள்ளதாம். சிவாஜி, ஜென்டில் மேன், வில்லன், நாணயம், பீஸ்ட் ஆகிய படங்களின் காப்பி தான் துணிவு என கூறப்படுகிறது.
ஏற்கனவே வலிமையில் சறுக்கலை சந்தித்த இயக்குனர் எச். வினோத், மீண்டும் இப்படியொரு கதையால் வெற்றிபெறுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும் ரசிகர்கள் துணிவு ஹாட்ரிக் வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
Listen News!