• Sep 20 2024

இத்தனை தியேட்டர்களில் தி லெஜெண்ட் ரிலீஸா? படத்தின் சூப்பர் அப்டேட்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

ஜேடி மற்றும் ஜெர்ரி இயக்கத்தில் சரவணா ஸ்டோரின் உரிமையாளரான நம்ம அண்ணாச்சி நடிப்பில் வெளியாகும் திரைப்படம் தி லெஜெண்ட். இப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் ஹரிஷ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

லெஜெண்ட் சரவணனின் ஜோடியாக ஹிந்தி நடிகை ஊர்வசி ரத்வத்துல நடித்துள்ளார்.மேலும் பிரபு, மயில் சாமி, விஜய் குமார், ரோபோ சங்கர் ஆகிய மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

இப்படத்தில் விஞ்ஞானியாக நடித்துள்ளார் லெஜெண்ட் சரவணன்.காமெடி,ஆக்ஷன் ரொமான்ஸ் சென்டிமென்ட் போன்ற அனைத்து காட்சிகளிலும் பின்னி பெடல் எடுக்கிறார். ட்ரெய்லரில் வரும் பல காட்சிகள் மற்றும் அண்ணாச்சியின் உடை போன்றவை சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தை நினைவுகூருகின்றது.

மேலும் விஜய்,அஜித் போன்ற நடிகர்களே பான் இந்தியா திரைப்படத்தை எடுக்க யோசித்து வரும் நிலையில் அண்ணாச்சி தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்து இருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

பல கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் லாபத்தை தரும என்பது சந்தேகம்தான் இருப்பினும் துணிச்சலாக இறங்கி பார்க்க முடிவு செய்திருக்கும் அண்ணாச்சியின் இந்த தைரியம் பலரையும் கவர்ந்துள்ளது.

அந்தவகையில் படத்தை பிரபல தயாரிப்பாளரும் ஃபைனான்ஸியருமானஅன்புசெழியன் கோபுரம் பிலிம்ஸ் கைப்பற்றி ரிலீஸ் செய்ய உள்ளது.

திரைப்படம் ஜூலை 28ஆம் திகதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சூப்பர் ஸ்டார் நடிகர்களின் படங்களுக்கு இணையாக சுமார் 800 திரையரங்குகளில் தமிழ்நாட்டில் மட்டும் இந்த படம் ரிலீஸாகும் என கூறப்பட்டுள்ளது

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement