பிரின்ஸ் படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் நேற்றைய தினம் வெளியாகிய திரைப்படம் தான் மாவீரன்.பேண்டஸி ஜானரில் வெளியாகிய இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது.இப்படத்தின் முதற்காட்சியை ரசிகர்களுடன் இருந்து சிவகார்த்திகேயன் பார்த்துள்ளார்.
இந்நிலையில் ரசிகர்களோடு 'மாவீரன்' படத்தை பார்த்த இயக்குநர் மடோன் அஸ்வின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, 'படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது. முக்கியமாக காமெடி காட்சிகளை மக்கள் ரசித்து பார்த்தார்கள். என்னுடைய முதல் படத்தை திரையரங்கில் பார்க்கிறேன். மண்டேலாவிற்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்தப்படத்தை சில நிகழ்வுகளை மையமாக வைத்து தான் எடுத்தோம்.யாரையும் காயப்படுத்தி விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். பொதுவாக எல்லா ஹவுசிங் போர்டும் ஒரே கலரில் தான் இருக்கும். சென்னை கே.பி. பார்க்கிலும் இந்த பிரச்சனைகள் உள்ளது. இதனை ஒரு ரெஃபரன்ஸாக எடுத்து கொண்டாமே தவிர, யாரையும் குறிப்பிட்டு எடுக்கவில்லை.
இது சூப்பர் ஹீரோ படம் இல்லை. பேன்டஸி படம் தான். அரசியல் படமாக மாற்றி விடாதீர்கள். உதயநிதி படம் பார்த்துவிட்டு இரண்டு தம்ப்ஸ் அப் கொடுத்திருந்தது மகிழ்ச்சியாக இருந்தது. விஜய் சேதுபதி டப்பிங்கில் படம் பார்த்த போதே ரசித்து பார்த்தார். இவ்வாறு செய்தியாளர்கள் சந்திப்பில் 'மாவீரன்' படம் குறித்து பேசியுள்ளார்.
'மாவீரன்' படத்தில் வித்தியாசமான சிவகார்த்திகேயனை பார்த்துள்ளதாக ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். அதே போல் வில்லனாக அரசியல்வாதி ரோலில் கலக்கியுள்ளார் இயக்குநர் மிஷ்கின். மேலும், சிவகார்த்திகேயன் அம்மாவாக நடித்துள்ள சரிதா மற்றும் யோகி பாபு ஆகியோரின் கதாபாத்திரங்களுக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மேலும், மாவீரன் படத்திற்கு நேற்றைய தினம் நல்ல ஓபனிங் கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
Listen News!