• Nov 19 2024

‘இராவண கோட்டம்’ திரைப்படம், சில தரப்பினரை காயப்படுத்துகிறதா? படக்குழு கொடுத்த விளக்கம்..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

சமுதாயத்தில் சில தரப்பினரை ’இராவண கோட்டம்’ திரைப்படம் திரைப்படம் காயப்படுத்துவதாக எழுந்த புகாரை அடுத்து, பட நிறுவனம் அதற்கு விளக்கமளித்துள்ளது.

மதயானைக் கூட்டம் திரைப்படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாறனின் இயக்கத்தில், ஷாந்தனு பாக்யராஜ், பிரபு, கயல் ஆனந்தி, இளவரசு உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் இராவண கோட்டம். 

இந்த திரைப்படம் நாளை(மே 12) திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் அதற்கு தடை கோரி குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனையொட்டி, இராவண கோட்டம் திரைப்படம் எவருக்கும் எதிரானது அல்ல என பட நிறுவனம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

வெம்மையும் வறட்சியும் சூழ்ந்த ராமநாதபுரம் பின்னணியில், அதன் வறட்சியின் வரலாற்று பக்கங்களையும் இராவண கோட்டம் திரைப்படம் ஆராய்கிறது. பிரபு - இளவரசு ஆகியோர் இருவேறு சமூகங்களை சார்ந்த நண்பர்களாக தோன்றுகிறார்கள். இவர்களின் வாரிசுகளுக்கு இடையே, கயல் ஆனந்தியின் காதலால் பிரச்சினை முளைக்கிறது. கூடவே ஊரில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சமும் இன்னொரு பிரச்சினையாக வளர்கிறது.

தண்ணீர் பஞ்சத்துக்கு காரணம் என்னவென பிரபுவும் அவரது மகன் ஷாந்தனுவும் ஆராய்கிறார்கள். இந்த இடத்தில் சீமைக்கருவேல மரங்களும், அவை காமராஜர் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டதாக இராவண கோட்டம் திரைப்படம் சித்தரிப்பதாகவும், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்டதை காமராஜர் மீது பழிபோடுகிறது திரைப்படம் என்றும் எதிர்ப்பாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இது தவிர இயக்குநர் விக்ரம் சுகுமாறன், ‘முதுகளத்தூர் கலவரம்’ தொடர்பாக படவிழாவில் தெரிவித்த சில கருத்துக்களும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளன.

இந்த வகையில் நாடார் சமூக அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் சார்பில், ’விஷம கருத்துக்களை பரப்பி, இருவேறு சமூகங்களுக்கு இடையே கலகமூட்டும் இராவண கோட்டம் திரைப்படத்தை தடை செய்யவேண்டும்’ என அரசிடம் கோரி இருக்கின்றனர். இவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் இராவண கோட்டம் படக்குழு இன்று விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், ‘மண் சார்ந்த கதையை, மனிதத்தை, அன்பை விதைக்கும் படைப்பாக மட்டுமே இராவண கோட்டம் திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறோம். முழுக்கவும் கற்பனையில் உருவாக்கப்பட்ட இதன் கதையில், யாரையும் காயப்படுத்தும் வகையில் எந்தவொரு காட்சியும் வைக்கவில்லை. படத்தில் இரு சில இனத்தினரை காயப்படுத்தி உள்ளதாக எழுந்துள்ள வதந்திகளை நம்பி, படத்தின் மீது படத்துக்கு தடை கோருவதும், தடுப்பதுமான செயல்பாடுகளில் எவரும் ஈடுபட வேண்டாம்’ என கோரப்பட்டுள்ளது.





Advertisement

Advertisement