கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுநரான ஷர்மிளா இணையத்தளத்தின் மூலம் கோவை மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் மிகவும் பிரபலமானார். அவரை பாராட்டவும், ஊக்கமளிக்கவும் பிரபலங்கள் பலரும் அவ்வபோது ஷர்மிளா பணியாற்றும் பேருந்தில் பயணம் செய்து அவருக்கு பாராட்டுக்கள் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தூத்துக்க பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழியும் இவரது பேருந்தில் பயணம் மேற்கொண்டு பாராட்டு தெரிவித்தார். அப்போது பணியில் இருந்த பயிற்சி பெண் நடத்துநருக்கும், ஷர்மிளாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஷர்மிளாவை பேருந்தின் உரிமையாளர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
இதனால் பணியை இழந்த ஷர்மிளா இனி வரும் காலத்தில் கார் அல்லது ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்திக் கொள்வேன் என்று தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் ஷர்மிளாவிற்கு சொந்தமாக தொழில் செய்வதற்காக மாருதி சுஸூகி நிறுவனத்தின் எர்டிகா காரை பரிசாக அளித்து பாராட்டுக்களை தெரிவித்திருந்தார்.
இந்த காரின் விலை குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது இந்தக் காரைப் பொறுத்தவரை பெட்ரோல் வேரியன்ட் ரூ 9.75 லட்சம் என்ற விலையிலும், சிஎன்ஜி வேரியண்ட் ரூ 10.70 லட்சம் என்ற விலையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில் நடிகர் கமல்ஹாசன் ஷர்மிளாவுக்கு ரூ 10 லட்சம் விலையிலான காரை பரிசாக கொடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கின்றது.
Listen News!