• Sep 20 2024

ஹீரோவாக கலக்கி வரும் சந்தானத்தின் சொத்து மதிப்பு இவ்வளவா?

sarmiya / 11 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்குள் நுழைந்து இன்று ஹீரோவாக கலக்கி வரும் நாயகன் தான் சந்தானம். இவருக்கென ஒரு ரசிகர் கூட்டமே இருக்கின்றது. இவர் கடைசியாக ரிட்டர்ன்ஸ் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். காமெடி பேய்க் கதையாக உருவாகிய இந்த படம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் பெற்றிருந்தது. 


தன்னுடைய சினிமா கேரியரை துவங்கிய முதல் மிடில்கிளாஸ் குடும்பத்தை சேர்ந்த ஒருவராக இருந்த சந்தானம் பின்னர் காமெடி படங்களுக்கே மூன்று கோடி முதல் சம்பளம் பெறும் நடிகராக உயர்ந்தார். தற்போது ஹீரோவாக நடிக்கும் படங்களுக்கு மூன்று தொடக்கம் இருபது  கோடி வரை சம்பளம் பெறுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. இந்நிலையில் சந்தானத்தின் சொத்து மதிப்பு தொடர்பாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.


இவருக்கு சென்னையில் ஒரு வீடு, இருக்கும் பட்சத்தில் லாபகரமான ரியல்ஸ்டேட் பிஸினஸ்களும் செய்து வருகின்றார். இரு சொகுசு  கார்களுடன் ஆரம்பத்தில் முதல் வாங்கிய காரையும் நியாபகமாக வைத்திருக்கிறாராம். அதனால் இவரின் சொத்துமதிப்பு 120 _150 கோடி  ரூபாய் வரை இருக்கும்  என தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

Advertisement

Advertisement