• Sep 20 2024

பிக்பாஸில் இந்த வாரம் வெளியேறப்போவது சீரியல் நாயகியா? ட்ராமா குயினுக்கு ஆப்பு உறுதி

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பிராந்திய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் மேலும் சூடு பிடிக்கின்றது. அதிலும் சனி, ஞாயிறு கமல் தொகுத்து வழங்கும் காட்சியை  பார்ப்பதற்கென தனி ரசிகர் கூட்டமே காத்திருக்கும்.

இதில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பிரபலத்தோடு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைப்பதால், சினிமாவில் நடிக்க விரும்பும் நடிகர்கள் இந்த நிகழ்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். 

இவ்வாறான நிலையில், இந்த வாரம் விணுஷா தான்  பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப்போகிறார் என தகவல் கசிந்துள்ளது. 

அதன்படி, இந்த வாரம் நாமினேஷனில் 11 போட்டியாளர்கள் சிக்கி உள்ளார்கள் இதில் அதிக வாக்குகளை பெற்று பிரதீப் டாப் லிஸ்டில் இருக்கிறார். அவரை தொடர்ந்து நிக்சன், மணிகண்டன், விஷ்ணு, ஜோவிகா, அக்ஷயா, மாயா போன்ற போட்டியாளர்களும் அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர். இறுதியாக கூல் சுரேஷ், யுகேந்திரன், விக்ரம், வினுஷா ஆகியோர்கள் இறுதி நான்கு இடத்தில் உள்ளனர்.


எனவே இந்த வாரம் பாரதிக்கண்ணமா சீரியல் நாயகி வினுஷா மிகவும் குறைவான வாக்குகளை பெற்ற நிலையில்  இவர் வெளியேறினால் நன்றாக இருக்கும் என மக்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் சில நாட்களுக்கு முன்பு தான் பிக் பாஸ் வீட்டை விட்டு செல்ல வேண்டும் என வினுஷா அழுது கொண்டிருந்தார். ஆகவே இவர் வெளியேறுவதுதான் சரி. எனவே இந்த வாரம் வினுஷா வெளியேறுவது தான் உறுதி என குறிப்பிட்டுள்ளார்.  

இதேவேளை, பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான விணுஷா தன்னை மக்கள் மத்தியில் மேலும்  பிரபலப்படுத்துக்கொள்ளவே  பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement