லியோ படத்தின் ட்ரெய்லர் கடந்த 5ம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. அதநேரம், இந்த ட்ரெய்லரில் பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் விஜய் கெட்டவார்த்தை பேசியிருந்ததால் சர்ச்சைக்குரிய விவாதமாக பேசப்பட்டு வருகின்றது.இதுவரை விஜய் தரப்பில் இருந்து எந்தவிதமான விளக்கங்களும் கொடுக்கப்படவில்லை.
இதனையடுத்து லியோ படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளுக்காக பிரபல யூடியூப் தளத்துக்கு பேட்டி கொடுத்திருந்த லோகேஷ் கனகராஜ் இந்த சர்ச்சைக்கு விளக்கம் கொடுத்துள்ளார்.அதாவது நடிகர் விஜய்யை இந்த வசனம் பேச வைத்ததே நான் தான்.இந்த சம்பவத்துக்கும் விஜய்ண்ணாவுக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறியிருந்தார்.
லியோ திரைப்படம் உலகளவில் ரூ. 434 கோடி வரை பிசினஸ் செய்யப்பட்டுள்ளது என திரை வட்டாரத்தில் கூறப்படுகிறது.இந்நிலையில், இப்படத்தின் பட்ஜெட் எவ்வளவு என்று தெரியவில்லை. முதல் முறையாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் லியோ படத்தின் பட்ஜெட் குறித்து பேசியுள்ளார்.
இதில், லியோ படத்தின் பட்ஜெட் கிட்டத்தட்ட ரூ. 300 கோடி வரை இருக்கும் என தெரிவித்துள்ளார். இதன்மூலம் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட விஜய் திரைப்படமாக லியோ மாறியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!