• Sep 20 2024

அனிருத்துக்கு தயாரிப்பாளர் கொடுத்த காரின் பெறுமதி... இத்தனை கோடியா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான திரைப்படம் தான் ஜெயிலர். இப்படத்தில் நடிகர் ரஜினி அசத்தலான ஸ்டைல் மூலம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார். இவருடன் இணைந்து இப்படத்தில் மோகன்லால், ஜாக்கி ஷெராப், கன்னட நடிகர் சிவ ராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


இவ்வாறாக பான் இந்திய நடிகர்கள் பலரும் இந்த படத்தில் நடித்துள்ளதால் நாடு முழுவதும் இந்த படம் செம ஹிட்டானது. அதாவது நெல்சனின் 'பீஸ்ட்' தோல்வியை தழுவியமையை தொடர்ந்து ஜெயிலர் படம் ஹிட்டடித்தன் மூலம் நெல்சன் ஒரு கம்பேக் கொடுத்துள்ளார். 


இந்நிலையில் ஜெயிலர் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக தயாரிப்பாளர் கலாநிதி மாறன் நெல்சன், ரஜினிகாந்த், அனிருத் ஆகியோருக்கு கார் அன்பளிப்பு செய்திருந்தார். அந்தவகையில் இசையமைப்பாளர் அனிருத்துக்கு தயாரிப்பாளர் கலாநிதி மாறன் PORSCHE காரை பரிசாக கொடுத்துள்ளார். இக்காரின் உடைய விலை குறித்த விபரம் தற்போது வெளியாகி இருக்கின்றது. அதாவது விலை ரூ.1.40 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. 


Advertisement

Advertisement