தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் என்ற பட்டத்தோடு முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நயன்தாரா.இவர் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அத்தோடு வாடகைத் தான் இரண்டு குழந்தைகளைப் பெற்றனர்.திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து இருவரும் கெரியரில் கவனம் செலுத்தி வருகின்றது.
இறுதியாக இவர் அட்லி இயக்கியத்தில் வெளியான ஜவான் திரைப்படத்தில் நடித்திருந்தார்.இந்த படத்தைத் தொடர்ந்து தமிழிலும் ஜெயம் ரவியுடன் நயன்தாரா நடித்த இறைவன் படம் வெளியானது. சைக்கோ த்ரில்லர் பாணியில் உருவான இத்திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தபோதும், படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு பேட்டி ஒன்றில் நயன்தாரா தன்னுடைய கணவர் விக்னேஷ் சிவன் பரிசாக கொடுத்த வாட்ச் பற்றி பேசி இருந்தார். அந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அந்த வாட்ச் ஆனது ரோலக்ஸ் கம்பெனியை சார்ந்ததாகவும் 31 mm டைலரைக் கொண்டதாகவும். வாட்சை சுற்றி டைமண்ட் கற்கள் பதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த வாட்சின் விலை, 23 லட்சம் முதல் 26 லட்சம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.
நயன்தாரா அணிந்து இருக்கும் வாட்சின் விலையை கேட்டு ஷாக்கான நெட்டிசன்ஸ் , வாட்ச் வாங்குன காசுக்கு ஒரு வீடு கட்டி வாங்கிவிடலாம் போல என்றும் அவர்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். வாட்ச் பிரியரான நயன்தாரா வாட்சுக்கு என்றே தனி பீரோவை வைத்து இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!