• Nov 17 2024

'எதிர்நீச்சல்' சீரியல் ஞானம் நிஜ வாழ்க்கையில் இப்படிப்பட்டவரா.. 12வருடங்களாக குழந்தை இல்லையாம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஹிட் சீரியல்களில் ஒன்று 'எதிர்நீச்சல்'. இந்த சீரியலானது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று டிஆர்பி யில் முன்னணி வகித்து வருகிறது. 


அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தை மையமாக கொண்ட இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தொடக்கத்தில் இந்த தொடருக்கு பல எதிர்ப்புகள் எழுந்தது. ஆனால், சமீப காலமாக இந்த தொடரில் பல பெண் புரட்சி வசனங்கள் அதிகமாக இடம்பெற்று வருவதால் இந்த தொடருக்கு இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்த சீரியலில் ஞானம் என்ற கதாபாத்திரத்தில் வரும் கமலேஷ் என்பவர் நடித்து வருகின்றார். அதில் இவர் அண்ணன் சொல்வது தவறு என்று தெரிந்தும் அதற்கு எதிர்ப்பு கூறாமல் யோசித்தபடி இருக்கும் ஒரு கதாபாத்திரமாக இருந்து வருகிறார். 


இந்நிலையில் கமலேஷின் மனைவி சிந்துஜா சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் தன்னுடைய கணவர் பற்றி சில ஒரு விஷயங்களை கூறியிருந்தார். அதில் அவர் கூறுகையில் "என்னுடைய கணவருக்கும் எனக்கும் நல்ல புரிதல் இருந்தாலும் கூட சில சமயங்களில் பிரச்சனைகள் வரும் அப்படி வரும் போது அது அடுத்த நிமிடமே அந்தப் பிரச்சினை காணாமல் போய்விடும். 


ஆனால் சீரியலில் இவர் நடிக்கும் கதாபாத்திரம் முற்றிலும் மாறுபட்டது. எனவே எனக்கு எதிர்நீச்சல் சீரியல் ஞானம் கதாபாத்திரத்தை சுத்தமாக பிடிக்கவில்லை. இவனெல்லாம் ஒரு மனிதனா என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனால் அந்த கதாபாத்திரம் என்னுடைய கணவர் என்று நினைக்கும்போது அதனை மிகவும் ரசிக்க தோன்றுகிறது" எனக் கூறியுள்ளார்.


மேலும் "கமலேஷ் 'ஆனந்தம்' சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது நான் செல்லும் இடமெல்லாம் என்னை பலர் பாவம் என்று கூறுவார்கள். உன் கணவர் ஏற்கனவே உன்னை திருமணம் செய்து கொண்டு இன்னொரு பெண்ணை காதலித்துக் கொண்டிருப்பதாக சொல்வார்கள். இதனை கேட்பதற்கு முதலில் அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் போக போக அதெல்லாம் எனக்கு பழகி விட்டது. 

இப்போதெல்லாம் யாரவது என்னிடம் கமலேஷ் பற்றி கேட்கும் போது எனக்கு உண்மையிலும் சிரிப்புதான் வருகிறது. அவருடைய கதாபாத்திரத்தை அவர் திறன்பட நடிக்கிறார். அதே போல எதிர்நீச்சல் ஞானம் நல்லவரா கெட்டவரா என்ற கேள்வி பலரிடம் எழுகிறது.

உண்மையில் கமலேஷ் ரொம்பவே ஜாலியானஒரு கேரக்டர். ஆனால் சட்டென்று எதற்கெடுத்தாலும் கோபப்படுவார். இருந்தாலும் அந்தக் கோவம் எல்லாம் ஒரு சில நிமிடங்கள் தான் இருக்கும். அதற்கு பிறகு அவர் சாந்தமாகி விடுவார். இதுதான் என்னுடைய கணவரின் சிறப்பு" என்று கமலேஷ் மனைவி சிந்துஜா அந்த பேட்டியில் மிகவும் சுவாரஷ்யமாக கூறி உள்ளார்.


மேலும் தன்னுடைய குடும்ப வாழ்க்கை பற்றிக் கூறுகையில் "கடந்த 2007ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இவர்கள் திருமணம் செய்து கொண்டதாகவும், திருமணம் செய்து 12 வருடங்களாக குழந்தை இல்லை எனவும், தங்களிற்கு இனி குழந்தை பிறக்குமா? பிறக்காதா? என்ற கேள்வியில் இருந்த நேரம் அழகான பெண் குழந்தை பிறந்தது எனவும் கூறி உள்ளார்.

அத்தோடு இந்த பெண் குழந்தை தான் தங்களுடைய மொத்த உலகம் என்று சிந்துஜா கூறினார். மேலும் தனது கணவர் படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் குடும்பத்தோடு அதிக நேரத்தை செலவிடுவார் எனவும், சீரியலில் எப்படி இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் குழந்தைதான் எங்களுக்கு எல்லாமே" எனவும் கூறியுள்ளார் சிந்துஜா.

Advertisement

Advertisement