சரியான திறமைகள் இருந்தும், ஆரம்ப காலங்களில் அடுத்தடுத்து தோல்விகளை மட்டுமே சந்தித்து வந்தார் சூர்யா. அந்நேரத்தில் தான் இயக்கிய 'நந்தா' படத்தில் சூர்யாவை ஹீரோவாக்கி, அவருக்கு மிகப் பெரிய கம்பேக் கொடுத்தார் டைரக்டர் பாலா. அன்றுமுதல் பாலா - சூர்யா இருவரின் நட்பு தொடர்ந்து வருகிறது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
'நந்தா' படத்தைத் தொடர்ந்து சூர்யா, பாலா கூட்டணி 'பிதாமகன்' படத்திலும் இணைந்தது. மேலும் இந்தமுறை ச்சியான் விக்ரமும் இவர்களுடன் கூட்டணி வைத்தார். முன்னதாக பாலாவின் முதல் படமான சேதுவில், விக்ரம் தான் ஹீரோவாக நடித்திருந்தார். மேலும் விக்ரம், சூர்யா, பாலா என சூப்பர் காம்போவில் வெளியான 'பிதாமகன்', தமிழ் சினிமாவில் புதிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்று தான் கூற வேண்டும்.
நந்தா, பிதாமகன் படங்களைத் தொடர்ந்து சூர்யா, பாலா கூட்டணி இணையும் என எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பாலா இயக்கிய 'அவன் இவன்' படத்தில், சிறிய கேமியோ ரோலில் மட்டும் வந்துபோனார் சூர்யா. எனினும் இந்நிலையில், இருவரும் பல வருட இடைவேளைக்குப் பின்னர், தற்போது 'வணங்கான்' படத்தில் இணைந்துள்ளனர். இதன் முதற்கட்ட சூட்டிங், கன்னியாகுமரி பகுதிகளில் நடைபெற்றது.
"வணங்கான்' என்ற டைட்டிலுடன், சூர்யாவுக்கு ஜோடியாக கிரித்தி ஷெட்டி, இசைக்கு ஜிவி பிரகாஷ் ஆகியோர் கமிட் ஆகியுள்ளதாக, சில மாதங்களுக்கு முன்னர் தான் அறிவிப்பு வெளியானது. அத்தோடு சூட்டிங் ஸ்பாட்டில் சூர்யாவுக்கும் பாலாவுக்கும் இடையே பிரச்சினை என்றும், இதனால் சூட்டிங் கேன்சல் ஆகிவிட்டதாகவும் கூறப்பட்டது. இது வதந்தி என கூறும் விதமாக, சூர்யாவும் ட்வீட் செய்திருந்தார்.
இந்நிலையில், 'வணங்கான்' சூட்டிங்கில் சூர்யாவுக்கும் பாலாவுக்கும் இடையே என்ன பிரச்சினை என, அந்தப் படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றும் சில்வா தெரிவித்துள்ளார். அத்தோடு தனியார் யூடியூப்பில் பேட்டி அளித்துள்ள அவர், முதலில் சூர்யா, பாலா இருவருடனும் வேலை பார்க்குறது நல்ல அனுபவம் எனக் கூறியுள்ளார்.
அத்தோடு "வணங்கான் படத்தில் சூர்யா - பாலா இடையே எந்தப் பிரச்சினையும் இல்லையென்றும், இப்போது தான் இரண்டு சண்டைக் காட்சிகளை எடுத்துமுடித்தோம். சூட்டிங்ல எந்த மாற்றமும் இல்லாம எல்லாமே நல்லபடியாதான் போய்ட்டு இருக்கு" என, ரசிகர்களை நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளார்.
Listen News!