• Sep 20 2024

வெந்து தணிந்தது காடு படத்தில் கமல்ஹாசனும் இருக்கின்றாரா?- அடடே இது நாயகன் பட லுக் ஆச்சே

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வரும் சிம்பு நடிப்பிலும் இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்திலும் வெளியாகிய திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு. ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியாகிய இப்படம் பாசிடிவ் விமர்சனங்களையே பெற்று வருகின்றது.

 இப்படம் முதல் கலெக்‌ஷன் சிம்புவின் திரைப்பயணத்தில் சாதனையாக இருக்கும் என சொல்லப்படுகிறது.இந்நிலையில் வெந்து தணிந்தது காடு படத்தில் யாரும் எதிர்பார்க்காத காட்சி ஒன்று வருகிறது. அதாவது படத்தின் கிளைமாக்ஸில் கமலின் நாயகன் பட வேலு நாயக்கர் புகைப்படத்தை வைத்திருப்பார்கள்.


அதுமட்டுமின்றி நாயகன் படத்தில் ஐயர் கதாபாத்திரத்தில் வரும் டெல்லி கணேஷ் இப்படத்திலும் அதே கதாபாத்திரத்தில் வருகிறார். அந்த காட்சியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது என்பதும் முக்கியமாகும்.

மேலும் இப்படத்தைத் தொடர்ந்து சிம்பு பத்து தல படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் கௌதம் மேனன் வில்லனாக நடிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.   


Advertisement

Advertisement