• Nov 17 2024

எதிர்நீச்சல் சீரியலுக்கு இப்படி ஒரு பின்னணி இருக்கா?அட இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

கோலங்கள் சீரியலுக்குப் பின் மிக நீண்ட இடைவெளிக்குப் பின் இயக்குநர் திருச்செல்வம் சன் டிவியில் எதிர்நீச்சல் என்ற சீரியலை இயக்கி வருகிறார்.


சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் 5 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு ஒளிபரப்படும் தகவல் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

கோலங்கள் சீரியலுக்குப் பின் மிக நீண்ட இடைவெளிக்குப் பின் இயக்குநர் திருச்செல்வம் சன் டிவியில் எதிர்நீச்சல் என்ற சீரியலை இயக்கி வருகிறார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 4 ஆம் தேதி முதல் இந்த சிரீயல் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.மற்ற சீரியல்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி டிஆர்பி ரேட்டிங்கிலும் எதிர்நீச்சல் சீரியல் தான் முன்னணியில் உள்ளது.

 

ஆணாதிக்கம் கொண்ட அண்ணன், தம்பிகள் தங்கள் வீட்டின் படித்தப் பெண்களை எவ்வாறு அடிமைப் படுத்துகிறார்கள் என்பதும், அதையும் மீறி அந்தப் பெண்கள் எப்படி மீண்டெந்து தங்கள் உரிமைகளை நிலைநாட்டுகிறார்கள் என்பதே இந்த சீரியலின் கதையாகும். இந்த சீரியலுக்கு மிகப்பெரிய பக்கப்பலமாக வசனங்கள் அமைந்துள்ளது. 



எதிர்நீச்சல் சீரியல் பெண் அடிமைத்தனம், ஆணாதிக்கம் தொடர்பானா கருத்துகளை பேசி வருவதால் நாளுக்கு நாள் வயது வித்தியாசம் இல்லாமல் ரசிகர்கள் எண்ணிக்கை கூடிக் கொண்டே வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு வரலாற்றில் இல்லாத வகையில் நாளை முதல் (ஜூலை 16) வாரத்தின் 7 நாட்களும் எதிர்நீச்சல் சீரியல் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

எதிர்நீச்சல் சீரியலில் இயக்குநர் மாரிமுத்து, நடிகைகள் பாம்பே ஞானம், மதுமிதா, கனிகா, தேவதர்ஷினி, ஹரிப்பிரியா, சபரி பிரசாந்த், கமலேஷ் , சத்ய தேவராஜன், சத்தியப்ரியா, காயத்திரி கிருஷ்ணன், ராதிகா வைரவேலவன் என ஏகப்பட்ட பிரபலங்களோடு சமீபத்தில் ஒளிபரப்பான எபிசோட்கள் மூலம் இயக்குநர் திருச்செல்வமும் எண்ட்ரீ கொடுத்துள்ளார். அவர் தொடர்பான காட்சிகளும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும்படி அமைந்துள்ளது. இப்படியான நிலையில் எதிர்நீச்சல் சீரியல் 5 மொழிகளில் ரீமேக் செய்யப்படுகிறது. 

அந்த வகையில் தெலுங்கில் “உப்பெனா” என்ற பெயரிலும், மலையாளத்தில் “கனல் பூவு” என்றும், கன்னடத்தில் “ஜனனி” எனவும், பெங்காலியில் “அலோர் தீகனா” என்ற சீரியலாகவும், மராத்தியில் “ஷப்பாஸ் சன்பாய்” என்ற பெயரிலும் எதிர்நீச்சல் சீரியல் வெற்றிகரமாக ரீமேக் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. சமீபகாலமாக பிறமொழி சீரியல்களின் கதைகள் தமிழில் எடுக்கப்பட்டு வரும் நிலையில், தமிழ் மொழி சீரியல் பிறமொழிகளில் ரீமேக் செய்யப்படுவது பெருமை என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

Advertisement

Advertisement