• Nov 17 2024

சின்னத்திரை புன்னகை அரசி டிடியின் சிரிப்பிற்கு பின்னால் இப்படி ஒரு வலி இருக்கா?-உற்சாகப்படுத்தும் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் நிறைய போராட்டங்களுக்குப் பிறகு தனது விடா முயற்சியினால் முன்னணி தொகுப்பாளினியாக இருந்து வருபவர் தான் டிடி எனப்படும் திவ்ய தர்ஷினி. இந்த நிலையில் இவர் குறித்து தான் பார்ப்போம் வாங்க.

தமிழ் சின்னத்திரையில் தனது 8ம் வகுப்பிலிருந்து தொகுப்பாளினியாக அறிமுகமாகியவர் தான் டிடி. இவர் ஆரம்பத்திலிருந்து பலரிடம் கேட்டு கேட்டு கற்றுக் கொண்டு தான் முன்னணி தொகுப்பாளராக அறிமுகமாகினார். இவர் தனது அழகிலும் உடையிலும் அதிக கவனம் செலுத்தி வருபவர் ஆவார்.


பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியிருந்தாலும் இவருக்கு நல்ல தொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்த நிகழ்ச்சி தான் காஃபி வித் டிடி. இந்த நிகழ்வ்சியை முதல் முதலில் விநாயகர் சதுர்த்தி அன்று தான் செய்தாராம். இதனால் இந்த நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினாராம். சிறப்பாக தொகுத்து வழங்கியதால் தான் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினாராம்.

தொடர்ந்து பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய இவர் தனது நீண்ட நாள் நண்பரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருப்பினும் சில ஆண்டுகளில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து விட்டதோடு விவாகரத்தும் செய்து விட்டாராம்.


இது தவிர அடிக்கடி நோய்வாய்ப்பட்டு வருகின்றாராம். நீண்ட நேரம் ஒரு இடத்தில் இவரால் நிற்க முடியாதாம். இதனால் தான் வீல் செயாரில் பல நிகழ்ச்சிகளுக்கு பங்கு கொண்டு வருகின்றாராம். தற்பொழுத நட்சத்திரங்களை பேட்டி எடுத்து வரும் இவர் அண்மையில் நடிகை நயன்தாராவைப் பேட்டி எடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சிக்கு நயன்தாராவைப் போலவே புடவை அணிந்து வந்திருந்தார். இவர்கள் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் வைரலானது. இது தவிர தற்பொழுது நடிப்பிலும் ஆர்வம் காட்டி வருகின்றாராம். அந்த வகையில் காஃபி வித் காதல் திரைப்படத்தில் நடித்திருந்தார்.இதனைத் தொடர்ந்தும் நல்ல படவாய்ப்பிற்காகக் காத்திருக்கின்றாராம். என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement