விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் தான் லியோ. இப்படம் அக்டோபர் 19ம் தேதி ரிலீஸாகவுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பானது காணப்படுகின்றது.இப்படத்தின் ஆடியோ லான்ச், வரும் 30ம் தேதி நேரு ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளதாக சொல்லப்படுகிறது.
ஆனால், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு இன்னும் வெளியிடவில்லை. அதாவது நேரு ஸ்டேடியத்தில் லியோ இசை வெளியீட்டு விழா நடத்துவதற்கான அனுமதி கிடைக்கவில்லை எனவும், இதற்கு ரெட் ஜெயன்ட் நிறுவனம் தான் காரணம் என்றும் செய்திகள் வெளியானது.
இந்தத் தகவலை பிரபலம் ஒருவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதில் அவர் கூறியதாவது,அதாவது சென்னை, தென் ஆற்காடு, வட ஆற்காடு, செங்கல்பட்டு ஏரியாவுக்கான லியோ தியேட்டர் ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயன்ட் நிறுவனம் கேட்டதாகவும், அதற்கு விஜய் தரப்பில் இருந்து முடியாது என சொல்லப்பட்டதாகவும், கூறியுள்ளார்.
அதனால் தான் நேரு ஸ்டேடியத்தில் லியோ இசை வெளியீட்டு விழா நடத்த அனுமதி கொடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்திருந்தார்.இந்த செய்தி இணையத்தில் வைரலானதை அடுத்து, லியோ படக்குழுவினர் இதற்கு விளக்கம் கொடுத்துள்ளனர். 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் டிவிட்டர் பக்கத்தில் சவுக்கு சங்கரின் பதிவை பகிர்ந்து, "இந்த செய்தி உண்மையில்லை" என விளக்கம் கொடுத்துள்ளது.
அதாவது லியோ தியேட்டர் ரைட்ஸ் விசயத்தில், ரெட் ஜெயன்ட் எதுவும் அழுத்தம் கொடுக்கவில்லை என்றும், லியோ இசை வெளியீட்டு விழாவுக்கான அனுமதி கிடைப்பதில் எந்த பிரச்சினையும் இல்லையென்றும் தெரிவித்துள்ளது. லியோ இசை வெளியீட்டு விழா குறித்த சர்ச்சைகளுக்கு, தற்போது படக்குழுவே விளக்கம் கொடுத்துள்ளது. இதனால், விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!