1979 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த புதிய வார்ப்புகள் என்ற திரைப்படத்தின் மூலம் துணை இயக்குனராக தனது சினிமா பயணத்தை ஆரம்பித்தவர் தான் மனோபாலா.அதன் பின்னர் பல படங்களை தயாரித்து வெள்ளித்திரை சின்னத்திரையிலும் தனது சாகசத்தை காட்டியுள்ளார்.
இவ்வாறுஇருக்கையில் அவரது உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த வாரம் தனது உயிரை நீத்துள்ளார்.
இவ்வாறு இருக்கையில் அவர் தனது வாழ்க்கையை சந்தோஷமாக கழித்த நாட்களை வீடியோவாக பதிவுசெய்து தனது யூடியூப்பில் பதிவேற்றி வந்துள்ளார்.
ஆரம்பத்தில் ஒன்றிரண்டு மூலிகைச் செடிகளைப் பராமரிக்க ஆரம்பித்தவர், தற்போது படிப்படியாகக் காய்கறிகள், கீரைகள் என வளர்த்து வந்துள்ளார்.
மேலும் இவரது தோட்டத்தில் வெண்டை, கத்திரி, சோளம், கீரைகள், பூக்கள், வெள்ளரிக்காய், கருவேப்பிலை, கற்பூரவள்ளி, மணத்தக்காளி, முள்ளங்கி, புதினா, தூதுவளை, தட்டைப்பயறு, புடலை, முருங்கை, மிளகாய் உள்ளிட்ட பயிர்கள் இருந்துள்ளது.
பலரும் காய்களைக் கடையில் வாங்கி சமைக்க வேண்டியதுதானே என நினைக்கலாம்.அத்தோடு அவர்களுக்கு, மாடித்தோட்டத்தில் இயற்கையாகக் காய்களை விளையவைத்து அதைச் சாப்பிட்டுப் பாருங்கள் என்று தனது அபிப்பிராயத்தையும் வெளியிட்டுள்ளார்.
மேலும் இவ்வாறு பல காய்கறிகளை விளைக்க செய்து வந்தவர் இப்போது உயிருடன் இல்லை என ரசிகர்கள் சோகத்துடன் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
Listen News!