• Sep 20 2024

ஹன்சிகாவின் 'சங்கீத்' நிகழ்ச்சியில் இப்படியொரு சம்பவம் இருக்கா..வெளியான சூப்பர் தகவல்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

ஹன்சிகாவின் திருமண சங்கீத் நிகழ்ச்சி குறித்த  புதிய தகவல்  ஒன்று வெளியாகியுள்ளது.

குழந்தை நட்சத்திரமாக பல பாலிவுட் படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகை  ஹன்சிகா மோத்வானி. தமழ் சினிமாவிர் தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை படத்தின் மூலம் கதாநாயகியான அறிமுகமாகி இருந்தார்.இதனைத் தொடர்ந்து முன்னணி நடிகர்கள் பலரது படங்களிலும் நடித்து வருகிறார் ஹன்சிகா மோத்வானி.

தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த ஆரம்பத்தில் கொழுக் மொழுக்கென இருந்தார் ஹன்சிகா. இதனால் அவரை குட்டி குஷ்பு என்று அழைத்து வந்தனர் ரசிகர்கள். ஆனால் சமீப காலமாக உடல் எடையை குறைத்து ஸ்லீம்மாக உள்ளார் ஹன்சிகா மோத்வானி. ஹன்சிகாவுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது.

அத்தோடு  தனது நண்பரும் தொழில் பார்ட்னருமான சோஹைல் கதூரியா என்பவரை காதலித்து வருகிறார் ஹன்சிகா. கடந்த சில நாட்களுக்கு முன்பு சோஹைல், ஹன்சிகாவிடம் ஈஃபிள் டவர் முன்பு காதலை ப்ரபோஸ் செய்த போட்டோக்கள் வைரலானது. தொடர்ந்து வரும் டிசம்பர் 4ஆம் தேதி இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளது. ஜெய்ப்பூரிலுள்ள அரண்மனையில் அவர்களின் திருமணம் நடைபெறுகிறது.

இவ்வாறுஇருக்கையில்  இதற்கான ஆரம்ப நிகழ்ச்சியாக மாதா கி சவுகி எனும் துர்கா பூஜை நேற்று நடைபெற்றுள்ளது. மேலும் இதில் ஹன்சிகாவின் குடும்பத்தினர் மற்றும் சோஹைலின் குடும்பத்தினர் பங்கேற்றுள்ளனர். ஹன்சிகா வீட்டின் அருகிலுள்ள மாலில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும்  இதில் ஹன்சிகாவும் சோஹைலும் பங்கேற்ற புகைப்படங்களும்  வீடியோக்களும் வெளியானது.


இவ்வாறுஇருக்கையில்  ஹன்சிகாவின் திருமணத்திற்கு முன்பாக டிசம்பர் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகளான சங்கீத், மெஹந்தி மற்றும் ஹல்தி ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்தோடு  சங்கீத் நிகழ்ச்சியில் ஹன்சிகாவும் சோஹைலும் கண்கவர் நடனம் ஆடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்தோடு  இருவரும் இணைந்து மெட்லி பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடவுள்ளதாகவும் சொல்லப்படுகின்றது. இருவரும் டேட்டிங் செல்வதற்கு முன்பாக நீண்ட கால நட்பை கொண்டிருந்தனர். இந்நிலையில் தங்களின் நட்பு முதல் தற்போது உள்ள உறவு வரை அனைத்தையும் நடனமாக வெளிப்படுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது


அந்த மெட்லி பட்டியலில் 1990களில் இடம் பெற்ற பாடல்கள் தொடங்கி ரொமான்டிக் பாடலில் முடியும் என்றும் கூறப்படுகிறது. அத்தோடு தனது வருங்கால மனைவிக்காக சர்ப்ரைஸாக சோலோ பர்ஃபாமன்ஸ் ஒன்றையும் கொடுக்க திட்டமிட்டுள்ளாராம் சோஹைல். சமீபத்தில் கண்ணன் படத்தின் படப்பிடிப்பை முடித்த நடிகை ஹன்சிகா மும்பை திரும்பியுள்ளார். திருமண வேலைகளில் பிஸியாக உள்ள ஹன்சிகா ஜனவரியில்தான் மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்பார் என குறிப்பிடப்படுகின்றது.

Advertisement

Advertisement