இந்திய திரையுலகில் பயோபிக் எடுக்கப்படுவது சமீபத்தில் அதிகரித்துள்ளது. ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை தழுவி தலைவி படத்தை ஏ.எல்.விஜய் இயக்கினார். அதில் கங்கனா ரணாவத் நடித்திருந்தார். அதேபோல் குயின் என்ற வெப் சீரிஸையும் கௌதம் மேனன் MX ப்ளேயருக்காக இயக்கியிருந்தார். மேலும் அதில் ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார். மேலும் பல அரசியல் தலைவர்களின் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்கும் முயற்சி நடந்துகொண்டு இருக்கிறது.
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறில் கங்கனா ரணாவத் நடித்தது போல் இந்திரா காந்தி இந்தியா முழுவதும் அமல்படுத்திய எமர்ஜென்ஸி காலக்கட்டத்தை மையப்ப்டுத்தி எமர்ஜென்ஸி படம் தற்போது உருவாகிவருகிறது. அதில் இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் கங்கனா ரணாவத் நடித்துவருகிறார். பாஜக ஆதரவாளராக இருக்கும் கங்கனா காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரின் வாழ்க்கை வரலாற்றில் நடிப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அதேபோல் சமீபத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தனது இளம் வயதில் அரசியலில் பட்ட கஷ்டங்கள் தொடர்பாக எங்கள் முதல்வர் எங்கள் பெருமை என்ற பெயரில் கண்காட்சி நடைபெற்றது. அதனை காண்பதற்கு இயக்குர் ஏ.ஆர். முருகதாஸ்,. நடிகர் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்டோர் வந்திருந்தனர். எனினும் அதனையடுத்து முதலமைச்சர் ஸ்டாலினின் வாழ்க்கை வரலாற்றில் எந்த நடிகர் நடிக்கப்போகிறார் என்ற விவாதங்கள் எழும்பின.
இந்நிலையில் ஆந்திர முதலமைச்சராக இருக்கும் ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்படுவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதில் ,நடிகர் ஜீவா நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. அதேசமயம், ஜீவா இந்த கதாபாத்திரத்திற்கு செட் ஆவாரா என்று ரசிகர்களில் ஒரு தரப்பினர் கேள்வி எழுப்பிவரும் சூழலில், தனது கரியரின் ஆரம்பத்திலேயே ராம், கற்றது தமிழ் ஆகிய படங்களின் மூலம் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய ஜீவா இதற்கும் செட் ஆவார் என மற்றொரு தரப்பினர் தெரிவித்து இருக்கின்றனர்.
முன்னதாக, ஒருங்கிணைந்த ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சராக ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி இருந்தார். அவர் கடந்த 2009ஆம் ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவரது வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி "யாத்ரா" என்ற படம் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியானது. மஹி ராகவ் இயக்கிய இப்படத்தில் ராஜசேகர ரெட்டி வேடத்தில் நடிகர் மம்மூட்டி நடித்திருந்தார். தெலுங்கில் எடுக்கப்பட்ட இப்படம் தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் டப் செய்து வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஜீவா நடிப்பதாக கூறப்படும் ஜெகன் மோகனின் வாழ்க்கை வரலாறானது யாத்ரா படத்தின் இரண்டாம் பாகமாக அமையலாம் என கருதப்படுகிறது.. அத்தோடு இந்தப் படத்துக்கு யாத்ரா 2 என பெயரிடப்பட்டுள்ளதாகவும் இதில் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகனும், ஆந்திர முதலமைச்சருமான ஜெகன் மோகன் ரெட்டியின் இளமை காலம் முதல் ஆந்திர முதலமைச்சர் ஆனது வரை இதில் இடம் பெற உள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இதற்கிடையே இந்தப் படத்தில் சூர்யா நடிக்கவிருக்கிறார் என தகவல் வெளியானதும் நினைவுகூரத்தக்கது.
Listen News!