• Sep 20 2024

இந்தியன் 2 இல் கமலுக்கு வில்லன் இந்த நடிகரா? இத யாரும் எதிர்பாக்கலயே..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படம், ‘இந்தியன் 2’. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார். இதில் ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, சித்தார்த், பிரியா பவானி சங்கர் உட்பட பலர் நடித்துள்ளனர்.


இந்த படம் தற்போது  இறுதி கட்டத்தில் இருக்கிறது. போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில் படம் அடுத்த வருடம் தான் திரைக்கு வர இருக்கிறது.


கமல்ஹாசன் இந்த படத்திற்காக அதிகம் வயதான லுக் மேக்கப் போட்டு நடித்து இருக்கிறார்.  இதன் கிராபிக்ஸ் பணிகள் அமெரிக்காவில் நடந்து வருகின்றன. 


இந்நிலையில் நடிகர் எஸ்ஜே சூர்யா இந்தியன் 2 படத்தில் நடித்து இருப்பதை உறுதி செய்து இருக்கிறார்.


இதனால் அவர் தான் கமலுக்கு வில்லனாக இந்தியன் 2ல் நடிக்கிறார் என தற்போது உறுதியாகி இருக்கிறது.  


Advertisement

Advertisement