லண்டனைச் சேர்ந்த ஆங்கில நடிகை தான் எமி ஜாக்சன். இவர் ஏ எல் விஜய் இயக்கத்தில் வெளியான மதராசபட்டினம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார். இப்படத்தில் கிடைத்த வரவேற்பை அடுத்து தங்கமகன், தெறி, எந்திரன் 2.0 ஆகிய படங்களில் நடித்திருக்கின்றார.
பிஸியாக நடித்துக் கொண்டிருந்த காலத்தில் 2019 ஆம் ஆண்டு லண்டனை சேர்ந்த தொழிலதிபரான ஜார்ஜ் என்பவரை காதலித்து வந்த எமி ஜாக்சன் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக பிரம்மாண்ட பார்ட்டியின் மூலம் தெரிவித்திருந்தனர்.
பின்னர் இந்த ஜோடிக்கு ஆண் குழந்தை பிறந்தது இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு காதலை விட்டு பிரிவதாக தடாலடி பதிவை வெளியிட்டு இருந்தார் எமி ஜாக்சன்.இதன் பின்னர் சில மாதங்களிலேயே நடிகர் எட் வெஸ்ட்விக்கை காதலித்து வருகிறார்.
முன்னதாக இருவரும் ஜோடியாக இத்தாலி நாட்டிற்கு டேட்டிங் சென்றிருந்தனர். அங்கு அவர்கள் எடுத்துக்கொண்ட லிப்லாக் போஸ்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி விமர்சனங்களுக்கு உள்ளாகி இருந்தது.
இந்நிலையில் தனது மகனுக்கு மூன்று வயது 9 மாதங்கள் ஆகி உள்ள விஷயத்தை அவனது ஒவ்வொரு வளர்ச்சி வீடியோவையும் இணைத்து குறிப்பிட்டுள்ளார் . அந்த வீடியோவில் தனது மகனுடன் குழந்தையாக மாறி எமி ஜாக்சனும் விளையாடுகின்றார் என்பதும் முக்கியமாகும்.
Listen News!