• Sep 20 2024

அடடே நடிகை அனுஷ்காவின் அம்மா இவர் தானா?-மகளைப் போலவே சூப்பராக இருக்கின்றாரே

stella / 1 year ago

Advertisement

Listen News!

கடந்த சில ஆண்டுகளாக திரையுலகில் தொடர்ந்து நடிக்காமல் இருந்து வருகிறார் அனுஷ்கா. அதற்க்கு காரணம் அவருடைய உடல் எடை தான் திடீரென அனுஷ்காவின் உடல் எடை கூடியதால் தான் அவருக்கு பட வாய்ப்புகள் குறைய துவங்கியது.

இந்நிலையில் மீண்டும் அனுஷ்காவிற்கு பட வாய்ப்புகள் வர துவங்கியுள்ளது. இயக்குநர் ஏ.எல் விஜய் இயக்கத்தில் மீண்டும் நடிக்கவுள்ளாராம் அனுஷ்கா.ஏற்கனவே தெய்வத்திருமகள், தாண்டவன் போன்ற படங்களில் விஜய்யுடடைய இயக்கத்தில் நடித்திருந்த அனுஷ்கா தற்போது மீண்டும் விஜய் இயக்கத்திலேயே நடிக்க கமிட்டாகியுள்ளார்.


இது தவிர இவர் நடித்துள்ள Miss Shetty Mr Polishetty திரைப்படம் விரைவில் ரிலீஸாகக் காத்திருக்கின்றது. தமிழில் விஜய், ரஜினி,சூர்யா, விக்ரம் எனப் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் எப்போது ரீ என்ட்ரி கொடுத்து நடித்து வருவார் என்று ரசிகர்கள் மிகவும் ஆவலாக இருக்கின்றனர்.


இந்நிலையில், நடிகை அனுஷ்கா தனது அம்மாவுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படத்தை அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி தன்னுடைய சமூக வலைத்தளத்தில் அனுஷ்கா பதிவு செய்துள்ளார்.இந்தப் புகைப்படம் தற்பொழுது வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement