• Nov 19 2024

விக்ரமின் ஐ படத்தில் எமி ஜாக்சனுக்கு பதிலா முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகையா?.. யார் தெரியுமா?

Jo / 1 year ago

Advertisement

Listen News!

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ஐ.

இப்படத்தில் மிகவும் கடுமையாக தனது உடலை வருத்திக்கொண்டு நடித்திருந்தார் நடிகர் விக்ரம்.

குறிப்பாக இப்படத்தில் வரும் கதாபாத்திரத்திற்காக சுமார் 30 கிலோ வரை தனது உடல் எடையை குறைத்து நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்திருந்தவர் நடிகை எமி ஜாக்சன். இவருக்கு ஐ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை ஏற்படுத்தி தந்தது.

ஆனால், எமி ஜாக்சன் நடித்திருந்த இந்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிப்பதாக இருந்தது நடிகை சமந்தா தானாம்.ஆனால், சில காரணங்களால் இப்படத்தில் சமந்தாவால் நடிக்க முடியாமல் போக, அதன்பின் எமி ஜாக்சன் இப்படத்தில் கமிட்டாகியுள்ளார் என கூறப்படுகிறது. 

Advertisement

Advertisement