• Sep 20 2024

நடிகை ஜெயலலிதாவின் அம்மா இவர் தானா?- இது வரை யாரும் பார்த்திடாத அரிதான புகைப்படம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் மூத்த நடிகையாகவும் தமிழக முதலமைச்சராகவும் தன்னை நிலை நிறுத்திக் கொண்டு வாழ்ந்த பெண்மனி தான் ஜெயலலிதா. இவர் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து நடிகர்களுக்கு இணையான ரசிகர் பட்டாளத்தை சேர்த்துக் கொண்டவர்.

மேலும் வெண்ணிறாடை என்னும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார். இதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்திருந்த இவர் எம்.ஜி.ஆர் உடன் மாத்திரம் 29 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து அரசியலில் களமிறங்கிய இவர் அதிலும் வெற்றி கண்டார்.திரையுலகில் எந்த அளவிற்கு கொடிகட்டி பறந்தாரோ, அதே போல் அரசியலிலும் முதலமைச்சராக பல முறை வெற்றிகண்டார். இவருடைய வாழ்க்கை வரலாறு படம் கூட அண்மையில் வெளியாகியிருந்தது.

அப்படத்தில் பாலிவூட் நடிகை கங்கனா ரணாவத் நடித்திருந்தார். மேலும் ஜெயலலிதா அவ்வளவு பெரிய நடிகையாக அவருக்கு பக்க பலமாக இருந்ததே ஜெயலலிதாவின் அம்மா சந்தியா தான்.

மேலும் தற்போது ஜெயலலிதா அவரின் அம்மாவுடன் நடிகையாக மிகவும் பிரபலமான பின் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்தப்புகைப்படம் வைரலாகி வருவதைக் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement